பைரன் சிங் ஏன் முதல்வர் ஆனார் என்பது பெரிய மர்மம். அவர் நிர்வாக ரீதியாக தோல்வியடைந்துள்ளார். இந்தியாவின் நற்பெயரை கெடுத்துள்ளார், இதற்கு மோடி தான் பொறுப்பு. மத்திய தலைமையின் மீது அவர் வைத்திருக்கும் ரகசிய அதிகாரம் என்ன?
மீரட்டில் பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு 2 வாக்குச் சாவடிகளில் 27 சதவீத போலி வாக்காளர்கள் உள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் சுனிதா வர்மாவை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் அருண்கோவில் தோற்கடித்துள்ளார். இதற்கு முன் மொத்தம் 61,365 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருக்கும் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் தொடர்பாக அவர் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மற்றொரு முறை நிரூபித்துள்ளார்.
மே.வங்கத்தில் தினாஜ்பூரில் 3 வருடத்தில் 20 அரசு துவக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் 26 பள்ளிகள் மூடப்பட உள்ளன. 50 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக் கூடத்திற்கு வெளியே உள்ளனர். திரிணாமுல் ஆட்சியில் முன்னேற்றமா?
செபி தலைவர் மாதவி பூரி புச் ஊழல் தொடர்பான வழக்கில் லோக்பால் அமைப்பு ஜனவரி 28 அன்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக தில்லி லோக்பால் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் அரசு முறை பயணமாக அமெ ரிக்காவுக்கு 6 நாட்கள் செல்ல உள்ளார். 2025 ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, டிச.27 அன்று தமிழகம் வர உள்ளார். திருவண்ணாமலை, கோவை, இராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவ லகங்களை திறந்து வைக்கவுள்ள அவர், அண் ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனமும் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின்போது பெண் வழக்க றிஞர்கள் பர்தா அணியக்கூடாது என்று ஜம்மு -காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வது அவ சியம் என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.