விமானப்படையில் 336 பணியிடங்கள்
இந்திய விமானப்படையில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வந்திருக்கிறது. அப்காட் (AFCAT-Air Force Common Admission Test) தேர்வு மூலம் அதிகாரி களுக்கான 336 பணி யிடங்கள் நிரப்பப்படும். 20 முதல் 24 வயதுள்ள வர்கள் விண்ணப்பிக்க லாம். நிர்வாகம் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்ப வர்களுக்கு 20 முதல் 26 வரை யில் இருக்கலாம். +2வில் கணிதப் பாடப்பிரிவில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, இள நிலைப் பட்டமும் பெற்றிருத்தல் அவசியமாகும். அல்லது பொறியியல் பட்டதாரியாக இருக்க வேண்டும். உடல் திறன்தகுதிக்கான தேர்வு இருக்க வேண்டும். AFCAT தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் பிப்ரவரி 22,23 – 2025 ஆகிய தேதிகளில் நடைபெறும். கூடுதல் விபரங்களை www.afcat.cdac.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இதே இணைய தளத்தில் விண்ணப்பங்களையும் நிரப்பலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி டிசம்பர் 31, 2024 ஆகும்.
முப்படைகளில் அதிகாரிகளாக விரும்புகிறீர்களா..? பட்டதாரிகளுக்கு 457 பணியிடங்கள்
நாட்டின் முப்படைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றுவ தற்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை (04/2025 - CDS-I) வெளியாகியிருக்கிறது. யுபிஎஸ்சி (Union Public Service Commission) நடத்தும் CDS(Combined Defence Service) தேர்வு வாயிலாக இவர்கள் தேர்வு செய்யப் போகி றார்கள். முப்படைகளிலும் 457 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பும் இந்தத் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 13, 2025 அன்று எழுத்துத் தேர்வு நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக கல்வி மற்றும் உடற்தகுதிகள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. ww.upsc online.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை நிரப்ப லாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31, 2024 ஆகும்.
பிளஸ் 2 படித்தவர்களுக்கு முப்படைகளில் 406 பணியிடங்கள்
தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை யில் நேரடியாக அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. +2 படித்தவர்கள் இதற்குத் தகுதியான வர்களாவர். என்டிஏ (NDA) என்றழைக் கப்படும் தேசிய பாதுகாப்பு அகா டமியில் பயிற்சி பெறப் போகும் தரைப்படையில் 208 பணியிடங்களும், கடற்படையில் 42 பணியிடங்களும், விமானப்படையில் 120 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. தனியாக கடற்படை அகாடமி பயிற்சி பெறப் போகும் கடற்படைக் கான 36 அதிகாரிகளைத் தேர்வு செய்யும் தேர்வும் இதோடு இணைந்து நடக்கவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூலை 02, 2006க்கும், ஜூலை 01, 2009க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். தரைப்படையில் சேர விரும்புவர்கள் +2வில் தேர்ச்சியும், விமானப்படை மற்றும் கடற்படையில் சேர விரும்புபவர்கள் +2வில் இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளைக் கொண்டவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தவறான விடை களுக்கு எதிர்மறை மதிப்பெண்களும் உண்டு. ஏப்ரல் 13, 2025 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும். ஜூலை 2025ல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். ஜனவரி 1, 2026 அன்று பணியில் சேர வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் கூடுதல் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி டிச.31, 2024.