இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் செங்கொடியினை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஏற்றி வைத்தார். சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிபிஎம் நாகை மாவட்டக் குழு சார்பில் மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வெண்மணி நினைவு தின மேடையில் நாகை மாவட்டக் குழு தோழர்கள் வழங்கினர்.
கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் சப்தர்ஹஷ்மி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வெண்மணித் தியாகிகளுக்கு வீரவணக்கம்
கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் 1) சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், 2) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.லாசர், 3) சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், 4) கே.பாலபாரதி, 5) சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், 6) சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணி நினைவு கருத்தரங்கம்
திருவாரூர், டிச.25 - வெண்மணி நினைவு நாளை யொட்டி 20 ஆவது ஆண்டாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் சார்பில் 400 ஊழியர்கள் சங்க மித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக திருவாரூரில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு, மாதர் சங்கத் தின் துணைத் தலைவர் உ. வாசுகி “கீழ வெண்மணி நெருப்பும், தொழிற் சங்கங்களின் பொறுப்பும்” என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சி.முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். தஞ்சாவூர் கோட்ட பொதுச் செயலாளர் வி.சேதுராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. ஆனந்த், தென் மண்டல எல்ஐசி உழைக் கும் மகளிர் துணைக் குழு இணை அமைப்பாளர் ஆர்.எஸ்.செண்பகம், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் ஆகி யோர் உரையாற்றினர். புதுக்கோட்டை தோழர் கருப்பையா நினைவு மலர் வெளியிடப்பட்டது. 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோவை டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத்தின் நிர்வாகிகள் கௌரவிக்கப் பட்டனர். 35 வயதுக்குட்பட்ட இளைய பங்கேற்பாளர்கள் 40 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர், மதுரை, கோயம் புத்தூர், திருநெல்வேலி, வேலூர், சேலம், சென்னை 1 மற்றும் 2 கோட்டங் கள், மதுரை - சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங் களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.