மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனக் கலவரத்தை பின்னால் இருந்து சில சக்திகள் தூண்டி விடுகின்றன என அம்மாநிலத்தின் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி சிட்த தார்த் மிர்துல் விமர் சித்துள்ளார். எப்போதெல் லாம் அமைதியை கொண்டுவரும் சூழல் உருவாகிறதோ அப்போதெல்லாம் சில சக்திகள் புதிய வன்முறையை தூண்டி விடுகின்றன என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது: மணிப்பூரில் ஏற்பட்ட இனக் கல வரத்தால் 250 க்கும் அதிகமான மக்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 60 ஆயி ரத்துக்கும் அதிகமான மக்கள் அவர் களின் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மணிப்பூர் மாநிலத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அங்கு அமைதியை, சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியவில்லை. இந்த கலவரம் அதுவாக நிற்கும் வரை நாம் காத்திருந்தால் பாது காப்பதற்கு மணிப்பூரில் ஒன்றுமே இருக் காது. அம்மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளது. தீவிரமான பண வீக்கம் உள்ளது. நான் தில்லியில் இருந்து மணிப்பூர் செல்லும் போதெல் லாம் கையோடு காய்கறிகளை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. அந்தள விற்கு மணிப்பூரில் பணவீக்கம் நிலவு கிறது. விமானத்தின் மூலமாக அங்கு பய ணிப்பது மட்டுமே பாதுகாப்பான வழி யாக உள்ளது. மணிப்பூரில் வேலை வாய்ப்புகள் என்பதே இல்லாமல் ஆகி வருகிறது என குறிப்பிட்டார். வன்முறை காரணமாக இடம்பெயர்ந் துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நான் சென்றுள்ளேன். அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கைக்கு திரும்ப ஆசைப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் தங்களின் வீட்டிற்கு செல்வதற்கு மட்டுமல்ல அவர்களது வாழ்க்கைக்கும், வீடு உள்ளிட்ட வாழ்வாதார பொருட்க ளுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நீதிபதி மிர்துல் தெரிவித் துள்ளார். அமராவதி