states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருப்பதி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்ததற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் திருப்பதி கோவிலில் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்தர்களுக்கு குறைந்தபட்ச வசதி கூட இல்லாத சூழல் திருப்பதியில் நிலவி வருகிறது.

பம்பாய், நாக்பூர் போன்ற  உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்துள்ளேன். ஆனால் உச்சநீதிமன்றத்தைப் போல ஒழுக்கமற்ற நீதிமன்றத்தை நான் பார்த்த தில்லை. இந்தப் பக்கத்திலிருந்து 6 வழக்கறி ஞர்களும், மறுபுறம் 6 வழக்கறிஞர்களும் கூச்சலிடுகின்றனர். மிக மோசமானது.

பாஜக மத்திய ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி கெஜ்ரிவால், சிசோடியா,  சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோரை சிறையில் அடைத்தது. இதனால் ஒரு அரசாங்கம் எப்படி சீர்குலைந்தது என்பதை தில்லி மக்கள் நன்கு அறிவர். அதனால் தில்லியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினால் தான், நாடு காப்பாற்றப்படும். அதனால் தான் ஆம் ஆத்மி கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். முழு ஒத்துழைப்புடன் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தில்லி மக்கள் ஆம் ஆத்மியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தில்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது.

அசாம் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலா ளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை இணைந்துள்ளது.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று நக்சல் கள் கொல்லப்பட்டதாக அம்மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

“21ஆம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது” என ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலியில் கட்டுமானப் பணியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் வரையில் சிக்கியிருக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் யானை தாக்கி யதில் கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின இளைஞர் விஷ்ணு உயிரிழந்தார்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜன வரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெறவுள்ளது. இந்த கும்ப மேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.