சென்னை, ஜன.9- பன்முகத்தன்மை, சமவாய்ப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தீர்வுகளில் நாட்டின் முன்னணி பணி யிட கலாச்சார ஆலோசனை நிறுவன மான அவதார் குழுமம் 'இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் ' என்னும் ஆராய்ச்சியின் முடிவுகளின் மூன்றாவது பதிப்பை புதன்கிழமை (ஜன.8) வெளியிட்டது. பணிபுரியும் பெண்களுக்கான உள்ளடக்கிய, பாதுகாப்பான, மீளும் தன்மை கொண்ட, நீடித்த நகரங்களில் ஒன்றாக சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பெண்களுக்கான இந்தியாவில் மிகச் சிறந்த பட்டியலில் சென்னை, கோயம் புத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 நகரங்களுடன் கணக்கெடுப்பு முடிவுகளில் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவதார் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ், “நகரங்களே வாய்ப்புகளுக்கான அடித்தளம். பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், வளர்கிறார் கள் என்பதை நகரங்களே வடிவமைக் கின்றன. எனவே, பெண்களின் முன்னேற்றம், அவர்களையும் உள்ள டக்கி முன்னேற்றுவதற்கு நமது நகரங் களின் அடிப்படைக் கொள்கைகள் - கலாச்சார அமைப்பு பற்றிய தெளி வான புரிதல் முக்கியமானது. அவதார் வெளியிடும் வருடாந்திரக் குறியீடான ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ துல்லியமான, மையப்படுத் தப்பட்ட தரவு மற்றும் ஆதாரம் சார்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி கணக்கெடுப்பை மேற்கொள்கிறது என்றார். மேலும், 2047க்குள் வளர்ச்சிய டைந்த நாடு என்ற நமது நாட்டின் கனவை நனவாக்கவேண்டும் என்றால், ஆண்களுக்கு இணையாக இந்தியப் பெண்கள் பல்வேறு துறையில் வல்லு நர்களாக இடம்பெறவேண்டும். நகரங் கள் உண்மையிலேயே பாலினத்தை உள்ளடக்கியதாகவும், பெண்களின் பலத்தை மேம்படுத்தக்கூடிய சூழலை யும் வழங்கினால் மட்டுமே இது சாத்தி யமாகும் என்றும் அவர் சுட்டிக்காட் டினார். 2024 இல் பெண்களுக்கான மிகச் சிறந்த முதல் 10 நகரங்களின் பட்டிய லில் பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், தில்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சமூகம், தொழில்துறை, உள்ள டங்கிய தன்மை இரண்டிலும் ஒப்பீட் டளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, பெண்களை அதிகம் உள்ள டக்கிய பிராந்தியமாக தென்னிந்தியா உள்ளது. தென்னிந்திய நகரங்களை உள்ளடக்கிய சராசரி மதிப்பெண் 18.56. தென்னிந்தியாவுக்கு நெருக்க மாக மேற்கு இந்தியா 16.92 மதிப் பெண்களுடன் பின்தொடர்கிறது. இந்த அம்சங்களில் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் பின்தங்கியுள்ளன, முறையே 11.79 மற்றும் 10.55 சரா சரியை அவை கொண்டுள்ளன. குறைந்த தொழில்துறை வளர்ச்சி, குறைந்த வாய்ப்புகளே இதற்குக் காரணம். கேரளா முன்னணி மாநிலங்கள் வரிசையில் அதிக பட்ச சராசரியாக 20.89 மதிப்பெண்க ளுடன் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆளும் கேரளா முன்னணியில் உள்ளது. தெலுங்கானா 20.57, மகாராஷ் டிரா 19.93, தமிழ்நாடு 19.38 மற்றும் கர்நாடகா 17.50 ஆகிய மதிப்பெண்க ளுடன் அடுத்தடுத்து உள்ளன. உள்கட்டமைப்புக்கான அதிகபட்ச மதிப்பெண்ணை ஹைதராபாத் (8.01) பெற்றுள்ளது (நன்கு இணைப் புகள் கொண்ட பொதுப் போக்கு வரத்து வசதி, பிற பயண வசதிகளே இதற்கு காரணம்). அடுத்து மும்பை (7.64) உள்ளது. சிறிய நகரங்களில் கோயம்புத்தூர் (7.75), கொச்சி (7.41) ஆகியவை உள்கட்டமைப்பு வசதி களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள் ளன. அரசாங்க செயல்திறன் திருவனந்த புரம் (8.15), புனே(7.06) சிறந்த நிர்வாகத் திறனுக்கு அதிகமதிப்பெண்களைப் பெற்றுள்ளன. திருவனந்தபுரம் (7.43), மும்பை (7.19), ஹைதராபாத் (6.95) ஆகியவை பாதுகாப்பில் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் பெங்களூரு (6.17), கொச்சி (6.02), குருகிராம் (5.60) ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவான பாது காப்பைக் கொண்டிருப்பதாக பெண்கள் மதிப்பிடுகின்றனர்.