states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு நடத்தும் மகா கும்பமேளாவில் பாவம் செய்தவர்கள்தான் செல்வார்கள். பாவம் செய்தவர்கள் செல்லும் இடம் தான் மகா கும்பமேளா. அதனால் வேறு யாரும் கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பில்லை.

உமர் அப்துல்லா கூறுவது போல இந்தியா கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்கானது மட்டும் அல்ல. நாட்டுக்கானது ; ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான  கூட்டணி ஆகும். மாநில அரசியல் களங்களால் சின்னஞ் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதே தவிரே இந்தியா கூட்டணிக்குள் வேறுறொன்றும் இல்லை.

தில்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் எந்த கட்சியும் ஆம் ஆத்மிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கவில்லை. தில்லி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை கெஜ்ரிவால் உணர்ந்ததால், அவர் தனக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி பிம்பத்தை கையிலெடுக்கிறார்.

இந்தியா கூட்டணி தேசிய அளவிலானது. ஆனால் மாநிலங்களின் அரசியல் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. இதுதான் அடிப்படை மந்திரம். இந்தியா கூட்டணி என்பது ஒரு சிந்தனை. அந்த சிந்தனையின் எண்ணம் ஒருபோதும் முடிவுக்கு வராது.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஜனவரி 18ஆம் தேதி அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். “ஒவ்வொரு இந்தியனுக்கும் அரசியலமைப்பின் கீழ் நீதி பெறும் உரிமை உண்டு. அரசியலமைப்பை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். எங்களுடன் சேருங்கள்; நீதியின் போர்வீரராகுங்கள்” என பொதுமக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

“ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்” என முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் திடீரென கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க பாஜக எதும் சதித்திட்டம் தீட்டியுள்ளதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

“தில்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலையை தொடங்கிவிட்டது” என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதூர்வேதி, “இது நவீன யுக அடிமைத்தனத்தை அரங்கேற்றும் முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.

“ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும், திருப்பதியில் விஐபிகள் மீதான கவனத்தை வளர்ப்பதன் மூலம் சாமானிய பக்தர்களை புறக்கணிக்கும் போக்கு தொடர்கிறது” என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம்சாட்டியுள்ளார்.

கட்சித் தலைவர் பதவியிலிருந்து சுக்பீர் சிங் பாதலின் ராஜினாமாவை சிரோமணி அகாலி தளத்தின் (எஸ்ஏடி) செயற்குழு வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டதாக செய்திகளை வெளியாகியுள்ளன.

“இந்தியாவின் விண்வெளிப் பார்வையில் தொழில்துறைகளுக்கு முக்கிய பங்கு உண்டு” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் 7 இடங்களில் அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை அன்று சோதனை நடத்தியது.