states

‘ஈஷா மீதான வழக்குகளை மாநில அரசு நடத்தலாம்’

புதுதில்லி, அக். 18 - கோவை வடவள்ளியைச் சேர்ந்தவ ரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எஸ்.காமராஜ் (69)சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அதில், “கீதா (42), லதா (39) ஆகிய தனது  2 மகள்கள் ஈஷா யோகா மையத்தில் யோகா  கற்றுக் கொள்ள சென்றவர்கள் அங்கேயே  தங்கி விட்டனர். அவர்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படு வதாக தெரிய வருகிறது. எனவே, எனது இரு மகள்களையும் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு, “ஈஷா யோகா நிறுவனர் தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டு இவர்களை சன்னி யாசிகளாக மாற்றுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியதுடன், “ஈஷா யோகா  மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரத்தை அக்டோபர் 4-ஆம் தேதி காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.  அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை யில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் கோவை ஈஷா யோகா மையத்தில் 2 நாட்களாக விசாரணை நடத்தினர். 

இதற்கு எதிராக, ஈஷா மையம் உச்ச நீதிமன்றத்திற்கு ஓடிய நிலையில், “இது போன்ற (ஆன்மீகத் தலம்) இடத்திற்குள் காவல்துறையையோ அல்லது ராணு வத்தையோ அனுமதிக்க முடியாது...” என்ற  உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எந்த முதன்மை யான காரணமும் இல்லாமல் காவல்துறை விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உயர் நீதி மன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், மேலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆட்கொணர்வு மனுவையும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு மாற்றிக் கொண்டது. இந்நிலையில், ஆட்கொணர்வு வழக்கு வெள்ளிக்கிழமையன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, ஈஷா அறக்கட் டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜராகி வாதாடினார். “கீதா,  லதா ஆகிய இரண்டு பெண் துறவிகளும் தாமாக முன்வந்து அங்கு தங்கியுள்ளனர். இதனை நீதிமன்றத்திலும் அவர்கள் தெரி வித்துள்ளனர். எனவே, இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, ஆட்கொணர்வு மனுவைத் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை” என கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “குழந்தை கள் வயது வந்தவர்களாக இருக்கும் போது, ​​அவர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்த பெற்றோர்கள் புகார் அளிக்க முடியாது; ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்வதற்கு பதி லாக பெற்றோர்கள் தங்கள் வயது வந்த  குழந்தைகளின் நம்பிக்கையைபெற வேண்டும். வேதனை எவ்வளவு கடுமை யானதாக இருந்தாலும், அந்தப் பெண்கள் மேஜர் எனும்போது, யாரையும் சந்திக்கும்படி நீதிமன்றம் அவர்களை கட்டாயப்படுத்த முடி யாது. வேண்டுமானால், பெற்றோர்கள் ஈஷா விற்கு சென்று தங்களின் குழந்தைகளைச் சந்திக்கலாம்” என்று கூறி, ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை முடித்து வைத்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “ஈஷாவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதால், நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கும் காவல்துறையின் உரிமையைக் குறைக்க முடியாது” என்று உத்தரவில் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி னார்.  ஆனால், இதற்கு ஈஷா தரப்பு வழக்கறி ஞர் முகுல் ரோத்கியும், ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், தமிழக வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஹேபியஸ் கார்பஸ் மனு தொடர்பான ஒரே அம்சத்திற்கு மட்டுமே இங்கே தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது; அந்த  வழக்கு மட்டுமே முடித்து வைக்கப்படுகிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்; மேலும், இந்த வழக்கில் நாங்கள் தெளிவு படுத்திய அம்சம் என்னவென்றால், ஆட் கொணர்வு வழக்கில் ஈஷா மையம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அவ்வாறு கருத்துக்களை வெளியிடப்பட்டிருக்கக் கூடாது. நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மக்களை அவமதிப்பதாகவும், நிறு வனங்களை இழிவுபடுத்துவதாகவும் இருக்க முடியாது” என்றார். “ஈஷா மீது நிலுவையில் உள்ள வழக்கு களை விசாரிக்க மாநில அரசுக்கு எந்த தடை யும் இல்லை; அதுதொடர்பான விசாரணை களை மாநில அரசு நடத்தலாம். இது அவர்க ளது கடமையும் ஆகும்” எனவும் தலைமை நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.