states

img

மதரஸாக்களில் சமஸ்கிருதம் திணிக்க மோடி அரசு தீவிரம்

இஸ்லாமிய கல்வி நிறு வனங்களான மத ரஸாக்களை ஒழி த்துக்கட்ட மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மதரஸாக்களுக்கு எதிராக மோடி அரசு, பாஜக ஆளும் மாநில அரசுகள் மூலம் பல்வேறு நெருக்கடி அளித்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரகண்ட் அரசு மாநிலத்தில் உள்ள 416  மதரஸா கல்வி நிறுவனங்களில் சமஸ்கிரு தத்தைக் கட்டாயப் பாடமாக்க திட்டமிட்டு ள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. “முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மதரஸாக் களில் சமஸ்கிருத திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் சமஸ் கிருதத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்ப ந்தத்தில் கையெழுத்திட முறையான முன்மொழிவு செய்யப்பட்டது” என அம் மாநில மதரஸா வாரியத்தின் முப்தி ஷா மூன் காஸ்மி கூறியுள்ளார். மதரஸாக் களில் சமஸ்கிருதத்தை திணிக்க உத்தரகண்ட் முஸ்லிம் அமைப்பினர்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.