states

img

பீகார் கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

பாஜக - ஐக் கிய ஜனதாதளம் கூட்டணி ஆளும் பீகார் மாநிலத் தில்  பூரண மது விலக்கு அமலில் உள்ளது. ஆனால் புதனன்று மாலை சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 75க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 27 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 30 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளதாகவும் பீகார் அரசு வியாழனன்று மாலை அறிக்கை வெளி யிட்டது. இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வியா ழனன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் பீகார் கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து ள்ளது. இன்னும் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கள்ளச் சாராய மரணம் தொடர்பாக பீகார் மாநில அரசு சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.