states

மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை அண்ணா பல்கலை., நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு எஸ்எப்ஐ கண்டனம்

சென்னை,டிச.25-  சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நிகழ காரண மான பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கிற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர்  கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியின் விடுதி யில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாணவி காவல் நிலை யத்தில் புகார் அளித்த பின்னர், இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தியதால் இப்பிரச்சனை மூடி மறைக்கப்படாமல் வெளியே வந்திருக்கிறது. அதேபோல் பல்கலைக்கழக பதிவாளரும் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விடுதிகளில் மாணவர்களின் பாது காப்பை உறுதி செய்வதற்கு வெளி நபர்கள் உள்ளே வர முடியாத அளவுக்கு பெரிய சுவர்கள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் பாதுகாவலர்கள் (குறைந்த பட்சம் ஒரு பெண் பாதுகாவலர் பணியில் இருக்க வேண்டும்) மற்றும் சிசிடிவி கேமிரா உள்ளிட்டவைகளை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என பல்கலைக் கழக மானிய குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் தற்போது காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநபர்கள் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ கத்தில் உள்ள அனைத்து வாயில்களிலும் பாதுகாவலர்கள் பணியில் இருந்த போது வெளி நபர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது.  அண்ணா பல்கலைக்கழக நிர்வா கத்தின் அலட்சியப் போக்கினால் இத்த கைய சம்பவம் நடந்தேறி இருப்பதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  இச்சம்பவம் மாணவிகளின் பாது காப்பை கேள்விக்குள்ளாக்கியதோடு பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து உரிய விசாரணை நடத்தி கடும் தண்டனை அளிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நட வடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களி லும் உட்புகார் குழு (ICC) அமைத்து மாண வர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர்.