இந்து மக்களின் உயிரிழப்பை மறைப்பது தான் வளர்ந்த பாரதமா? பாஜகவிற்கு சமாஜ்வாதி சரமாரி கேள்வி
கும்பமேளாவில் இந்து மக்களின் உயிரிழப்பை மறைப்பது தான் வளர்ந்த பாரதமா? என சமாஜ்வாதி தலை வர் அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். பட்ஜெட் தொடர்பாக செய்தியா ளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அவர் மேலும் கூறுகையில், “கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிச லில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாக தெரியவில்லை. கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் தரவு, பட்ஜெட் தரவைவிட முக்கிய மானது. கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை பேர் காய மடைந்தனர்? எத்தனை பேரைக் காண வில்லை என அரசினால் இதுவரை சொல்ல முடியவில்லை. குறிப்பாக உத்தரப்பிரதேச பாஜக அரசால் வெளி யிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை அனைத் தும் பொய்யான தகவல். இந்து விரோத அரசாங்கம் எங்கள் கட்சி இந்துக்களின் கட்சி என்று பாஜக கூறுகிறது. ஆனால் இந்துக்களின் மிகப்பெரிய விழாவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. இதுதான் உங்கள் பாஜகவின் வளர்ந்த பாரதமா? இதை விட இந்து விரோத அரசாங்கம் ஒன்று இருக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். உத்தரப் பிரதேச அரசை நம்ப முடியாததால் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க ராணுவத்தை அணுக வேண்டும்” என அவர் கூறினார்.
பிற நாடுகளின் மீதான டிரம்பின் வரி விதிப்புகள்
அமெரிக்க தொழிலாளர்களுக்கு வைக்கும் வெடிகுண்டுகள்
வாஷிங்டன், பிப்.1- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது பிப்ரவரி 1 முதல் 25 சதவீத வரி அமலாகிறது என அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே டிரம்பும் அவரது குடியரசு கட்சியும் தாங்கள் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயனளிக்கும், குடும்பங்களின் செலவுகள் குறையும், அமெரிக்க நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரி குறையும் என பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த வரி விதிப்பில் மெக்சிகோவின் வாகனத்துறையை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என அந்நாட்டின் வாகன இறக்குமதி மீது 200 சதவீதம் வரைகூட வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இவ்வாறு வரி விதிப்பதன் மூலம் அந்நாட்டு வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என டிரம்ப் மனக் கணக்கு போட்டுள்ளார். உலகமயமாக்கல் பொருளாதாரத்தால் அமெரிக்க நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் உற்பத்திக்கு மற்றொரு நாட்டில் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கும் மூலப்பொருட்களை சார்ந்துள்ளன. அமெரிக்காவில் கார் தயாரிக்கப்பட்டாலும் அவற்றிற்கு கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து உற்பத்திக்கான உதிரி பாகங்கள் தேவை. 2023 இல் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ள பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 893 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த இறக்குமதியில் அதிகமாக இடம் பெற்றது வாகனங்களுக்கான இயந்திர பாகங்கள், எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஆகும். டிரம்ப் விதிக்கும் இறக்குமதி வரிகளின் காரணமாக வாகனங்கள் மட்டுமின்றி அனைத்து விதமான பொருட்களின் விலைகளும் அதிரடியாக அதிகரிக்கத் துவங்கும். இந்த விலைவாசி உயர்வு அமெரிக்கத் தொழிலாளர்களின் குடும்பங்களை தான் முதலில் நேரடியாக தாக்கத் துவங்கும். அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகமாக உள்ளது. சில ஆண்டுகளாக போதிய அளவிலான ஊதிய உயர்வு கொடுக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் அமெரிக்காவில் வீடின்மை பிரச்சனை உச்சத்தில் உள்ளது. வீட்டின் வாடகை உச்சத்திற்கு சென்று விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அமெரிக்காவில் வீடற்றவர்களாக உள்ளனர். இதுபோன்ற அத்தியாவசியப் பிரச்சனைகளை சரி செய்யாமல் இறக்குமதி வரியை அதிகரிப்பதும், போர்களுக்கு உதவி செய்வதும் அமெரிக்க மக்களை மேலும் வறுமையில் தான் தள்ளும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. டிரம்ப் ஆரம்பத்தில் அமெரிக்க மக்களுக்கான செலவு குறையும் என வாக்குறுதி அளித்த ஒரு மாதத்திற்கு பிறகு, மற்றொரு பேட்டியில் “அமெரிக்கக் குடும்பங்களின் செலவு குறையும், அவர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை என நான் “உறுதி” செய்ய முடியாது” என்று தனது வாக்குறுதிக்கு மாறாகப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.