states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒன்றிய பட்ஜெட் தில்லி தேர்தலையொட்டி, தில்லி வாக்காளர் களைக் குறிவைத்து திட்டமிடப்பட்ட பட்ஜெட் போலத் தெரிகிறது. ரூ.12  லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை என கூறுவது மிகப்பெரிய  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு பீகார் தேர்தல் நடை பெறவுள்ளதால், அம்மாநிலத்துக்கு மட்டும் உள்கட்டமைப்பு அறி விப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அல்லது வேறெந்த தென்  மாநிலங்கள் குறித்தும் ஒரு வார்த்தைகூட உரையில் இல்லை.

ஒன்றிய பட்ஜெட் திசையில்லாத, நோக்க மில்லாத பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் எந்தத் துறைக்கும் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங் களின் பெயர்கள் கூட நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை.

உரை தொடங்கிய அரைமணி நேரத்தில், புதுத்  திட்டங்களுக்கென பீகாரின் பெயரை 4 முறை நிதி யமைச்சர் சொல்லிவிட்டார். ஆனால் நம்நாட்டில் 28  மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் இருக் கின்றன. இந்த வருட முடிவில் பீகாரில் தேர்தல் வருவது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றிய பட்ஜெட்டுக்காக நாங்கள்  (மகாராஷ்டிரா மக்கள்) ஏதாவது நிவா ரணம் கிடைக்கும் என்று ஆண்டு முழு வதும் காத்திருக்கிறோம். ஆனால் நிர்மலா சீதாராமனின் ஒன்றரை மணி நேர பட்ஜெட் வாசிப்பை கேட்டு வெறுங்கையுடன் தான் இருக்கிறோம்.