states

img

2025 - 26 ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்

விவசாயிகளுக்கு வழக்கம் போல ஏமாற்றம்

உரம்-எரிபொருள் மானியம் வெட்டிக் குறைப்பு

கல்வி, சுகாதாரத்திற்கு போதிய ஒதுக்கீடு இல்லை

வேலைவாய்ப்புக்கான  திட்டங்கள் இல்லை

புதுதில்லி, பிப்.1- ஒன்றிய அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்  கிழமையன்று தாக்கல் செய்  தார். இது நிதியமைச்சராக அவர் தாக்கல் செய்த 8- ஆவது பட்ஜெட் ஆகும். முன்னதாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வை, நிதித்துறை இணைய மைச்சர் பங்கஜ் சவுத்ரி,  தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ் வரன் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளுடன் சென்று நேரில் சந்தித்து நிர்மலா சீதா ராமன் வாழ்த்து பெற்றார். அப்போது, பத்ம விருது பெற்ற துலாரி தேவி வடி வமைத்த பீகாரின் மதுபானி கலை வேலைப்பாட்டுடன் கூடிய வெண்மை நிறச் சேலையை நிர்மலா சீதா ராமன் அணிந்திருந்தார். அந்த  உடையிலேயே பட்ஜெட்டை யும் தாக்கல் செய்தார்.

“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி”  - (உலகில் உள்ள உயிர்கள்  வாழ்வதற்கு மழை தேவைப்  படுவது போல ஒரு நாட்டின்  குடிமக்கள் வாழ்வதற்கு  நல்லாட்சி தேவைப்படு கிறது) என்ற திருக்குறளை யும், தெலுங்கு எழுத்தாளர் குருஜாடா அப்பாராவின் ‘தேசமாண்டே...’ என்ற பாட லில் வரும்  ‘நாடு என்பது  அதன் மண் அல்ல... மக்கள்’  என்று வரிகளையும் மேற் கோள் காட்டி, பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்கினார். அப்போது அவர் பேசு கையில், “உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா முத லிடத்தில் உள்ளது. அனை வருக்குமான வளர்ச்சி என்ற  நோக்கத்தில் அரசு செயல்  படுகிறது. நாட்டின் அனை த்து பகுதிகளிலும் வளர்ச்சி யை ஊக்குவிக்க தொடர்ந்து  நடவடிக்கை மேற்கொள் ளப்படும். உலகத்தின் உணவு உற்  பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தியை மேற்கொண்டு அதிகரிக்க மாநில அரசு களுடன் இணைந்து, ரூ. 1.70  லட்சம் கோடியில் விவசாயி கள் பயன்பெறும் வகையில்  திட்டங்கள் கொண்டுவரப் படும். ஸ்டார்ட்-அப் நிறு வனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு  வழங்கும் பங்காக ஏற்கெ னவே உள்ள ரூ.10,000 கோடி யுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். கால ணிகள் மற்றும் தோல் துறை யில் கவனம் செலுத்தும் வகை  யில் திட்டம் ஒன்று தொட ங்கப்படும். இதன்மூலம், 22  லட்சம் வேலை வாய்ப்புகள்  உருவாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவி யல் சிந்தனையை வளர்க்  கும் வகையில் அடல் டிங் கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழு வதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து  ஆண்டுகளில் உருவாக் கப்படும். ஊரகப் பகுதி களில் உள்ள அனைத்து  அரசு மேல்நிலைப் பள்ளி களில் இணையத் தொடர்பை  ஏற்படுத்துவதற்கு பிராட்  பேண்ட் வசதி ஏற்படுத்தப் படும்” எனத் தெரிவித்தார்.

துறைகள் வாரியான நிதி ஒதுக்கீடு

நிர்மலா சீதாராமன் தாக்  கல் செய்துள்ள நிதி நிலை  அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 4,91,732 கோடி ஒதுக்கப்  பட்டுள்ளது. கிராமப்புற முன்  னேற்றத்துக்கு ரூ. 2,66,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை விவகாரங்க ளுக்கு ரூ. 2,33,211 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. வேளாண்மை மற்றும்  அதன் துணை தொழில் களுக்கு ரூ. 1,71,437 கோடி  ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு ரூ. 1,28,650 லட்  சம் கோடி ஒதுக்கப்பட்டுள்  ளது. சுகாதாரத் துறைக்கு  ரூ.98,311 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. நகர்ப் புற மேம்பாட்டுக்கு ரூ. 96,777  கோடியும், தகவல் தொழில்  நுட்பம், தொலைபேசித்  துறைக்கு ரூ. 95,298 கோடி யும், எரிசக்தி துறைக்கு ரூ. 81,174 கோடியும், வணிகம்&  தொழில் துறைக்கு ரூ. 65,553  கோடியும் ஒதுக்கப்பட் டுள்ளது. சமூக நலனுக்கு ரூ.  60,052 கோடியும், அறிவியல்  துறைக்கு ரூ.55,679 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவும் பெருமுதலாளிகள் நலன்களுக்கானதே!

 

‘விக்சித் பாரத்’ எனும் கவர்ச்சிகர மான முழக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரக் கொள்கை திசையை மாற்றியமைக்கும் முக்கிய ஆவணமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த திசை மாற்றம் யாருக்கு சாதகமானது என்பதே அடிப்படை கேள்வி யாக அமைந்துள்ளது.

அடிப்படை அணுகுமுறை

“ஒரு நாடு என்பது மண் மட்டுமல்ல, மக்கள்தான்” என்ற அழகிய வாசகத்தை  முன்வைத்துக்கொண்டு, மக்களின் அடிப்  படை நலன்களை புறக்கணித்து, பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் லாப வேட்கையை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்மயமாக்கலின்  புதிய பரிமாணம் விவசாயத் துறையில், உழவர்களின் அடிப்படை கோரிக்கையான குறைந்த பட்ச ஆதரவு விலை உறுதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக, கார்ப்பரேட் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு வரம்பு ரூ. 5 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசா யத்தை கார்ப்பரேட்மயமாக்கவே வழி வகுக்கும். சீர்திருத்தத்தின் பெயரில்  உரிமை பறிப்பு தொழிலாளர் நலன்கள் குறித்த பார்வையும் கவலை அளிப்பதாக உள்ளது.  “சீர்திருத்தங்கள்” என்ற பெயரில் தொழிலா ளர் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. முறைசாரா துறை தொழிலாளர்களுக் கான பாதுகாப்பு வளையம் பலவீனப்படுத்  தப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்க ளின் தனியார்மயமாக்கம் மூலம் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது.

புறக்கணிக்கப்படும்  அடிப்படை துறைகள்

கல்வி மற்றும் சுகாதாரத் துறை களுக்கான ஒதுக்கீடு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. மொத்த பட்ஜெட்டில் கல்விக்கு 2.3 சதவிகிதமும், சுகாதா ரத்திற்கு 1.8 சதவிகிதமும் மட்டுமே ஒதுக்  கப்பட்டுள்ளது. இது சர்வதேச தரநிலை யான- மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)  மதிப்பில் 6 சதவிகிதத்தை விட மிகவும் குறைவாகும். முன்னுரிமைகளின் முரண்பாடு பாதுகாப்புத் துறைக்கு ரூ. 4,91,732 கோடி  ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், சமூக நலத்திற்கு வெறும் ரூ. 60,052 கோடி மட்டுமே  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விகிதாச்சாரமே  இந்த பட்ஜெட்டின் முன்னுரிமைகளை தெளிவாக காட்டுகிறது.

பொதுத்துறை மற்றும் தனியார்மயமாக்கல்

‘சொத்து பணமாக்கல்’ என்ற கவர்ச்சி கரமான பெயரில், ரூ. 10 லட்சம் கோடி மதிப்பி லான பொதுச்சொத்துக்கள் தனியார் வசம்  ஒப்படைக்கப்பட உள்ளன. மேலும், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முத லீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சத வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தேசிய  பாதுகாப்பு மற்றும் பொருளாதார இறை யாண்மையை கேள்விக்குறியாக்குகிறது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் எப்படி வளரும்?

குறு,சிறு, நடுத்தரத் (MSME) துறைக் கான முன்மொழிவுகள் கவர்ச்சிகரமாக தோன்றினாலும், அவற்றின் உள்ளார்ந்த  நோக்கம் இத்துறையை பெருநிறு வனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவே உள்ளது: சிறு நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி  முதல் ரூ. 25 கோடி வரையும், நடுத்தர நிறு வனங்களுக்கு ரூ. 50 கோடி முதல் ரூ. 125 கோடி வரையும் ரூ. 250 கோடி முதல் ரூ. 500  கோடி வரையும் விற்றுமுதல் வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்கள் உண்மையான சிறு தொழில்களை விட, பெரிய நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்கே பயனளிக்கும். வேலைவாய்ப்பு: கனவும் யதார்த்தமும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த வாக்குறுதிகள் வெறும்  எண்களாகவே உள்ளன:  50,000 அடல்  டிங்கரிங் ஆய்வகங்கள், - 10,000 ஆராய்ச்சி உதவித்தொகைகள், மருத்துவக் கல்வித் துறையில் 75,000 இடங்கள் அதிகரிப்பு எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு 1.2 கோடி வேலை வாய்ப்புகள் தேவைப்படும் நிலையில், இந்த  இலக்குகள் மிகவும் குறைவு.

வரிக் கொள்கை: யாருக்கு சாதகம்?

பெருநிறுவனங்களுக்கான வரிச்சலு கைகள் தொடர்கின்றன. அதே நேரம் மறை முக வரிகளான ஜிஎஸ்டி (GST) மூலம் சாமா னிய மக்கள் மீதான சுமை அதிகரிக்கிறது. வருமான வரி மாற்றங்கள் மத்திய தர  வர்க்கத்திற்கு சிறிய நிவாரணம் அளித்தா லும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடு செய்யும் அளவிற்கு இல்லை.

வளர்ச்சி யாருக்கானது?

இந்த பட்ஜெட் “விக்சித் பாரத்” என்ற கனவை முன்வைக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் பலன்கள் 1 சதவிகிதம் மேல்  தட்டு வர்க்கத்திற்கே சென்றடையும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மை யான பொருளாதார சமத்துவம், சமூக நீதி  மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மாற்று பொருளாதார கொள்கைகள் தேவை.

ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு

புதிய வரிக் கணக்கு தாக்கல் நடை முறையின் கீழ் வருமான வரி  கணக்கினை தாக்கல் செய்பவர் கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான வரு மானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை என ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்பு இது ரூ. 7 லட்சம் வரை இருந்தது. மேலும் நிலைக் கழிவு  ரூ. 75,000-த்துடன் சேர்த்து ரூ.12.75 லட்  சம் வரை ஆண்டு வருவாய் உள்ளோர்  வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரு மானம் கொண்டவர்கள் இந்த புதிய வரி  விகிதங்களின் மூலம் இனி 1.10 லட்சம்  ரூபாய் வரியை சேமிக்க முடியும்.  அதேபோல ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர்கள் புதிய வரி விகிதங்களின் கீழ் ஆண் டுக்கு 70,000 ரூபாய் வரை வரி சேமிக்க  முடியும்.  புதிய வரிக் கணக்கு தாக்கல் நடை முறையின் கீழ் மட்டுமே இந்த சலுகை யை அறிவித்துள்ள ஒன்றிய அரசு,  அனைவரும் இந்த புதிய நடை முறைக்கு மாற வேண்டும் என்பதற்கா கவே, 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  வீட்டு வாடகைக்கான வருமானம் 2.5 லட்சத்தை கடந்தால் அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும், அந்த  வரம்பு 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.  மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு  வரம்பு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் என அதிகரிக்கப்பட் டுள்ளது. வருமான வரி விகிதங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்க ளால், ஒன்றிய அரசுக்கு நேரடி வரி கள் மூலம் 1 லட்சம் கோடி ரூபாயும் மறை முக வரிகள் மூலம் 2600 கோடி ரூபாயும்  இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.

ரயில்வே என்ற வார்த்தையே இடம்பெறாத நிர்மலா சீதாராமன் உரை

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் வாசித்த பட்ஜெட் உரை யில், ‘ரயில்வே’ என்கிற வார்த்தை கூட  இடம்பெறவில்லை என்பது, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கி றது, சர்வதேச அளவில் 4-ஆவது மிகப்பெரிய ரயில்வேயாக இருக்கும் இந்தியன் ரயில்வே, ஒவ்வொரு நாளும் சுமார் 13,000 பயணிகள் ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாளொன் றுக்கு தோராயமாக 2.4 கோடி பேர்  பயணிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு ஏறத்  தாழ 41 கோடி பேர் ரயில்களில் பய ணிக்கின்றனர். எனினும், ரயில்களின் தேவை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்; பாதுகாப்பான ரயில் பய ணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று  கோரிக்கைகள் உள்ளன. ஆண்டுதோறும் ரயில்வே துறை யிலிருந்து 50,000 பேர் பணி ஓய்வு பெறு வதால் இப்போது ரயில்வே துறை யில் சுமார் 1.72 லட்சம் காலி பணியி டங்கள் இருக்கின்றன. இதில் தண்ட வாள பராமரிப்புக்கு 87,000 பேரும், ஸ்டேஷன் மாஸ்டராக 64,000 பேரும், லோகோ பைலட்டுகளாக 10,000 பேரும், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15,000 பேரும் தேவைப்படுகின்றனர். ஆனால் போதுமான ஆட்கள் இல்லா ததால் தொழில்நுட்ப கோளாறுகள் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கி றது. ஆண்டுக்கு 200 சிக்னல்கள் தோரா யமாக பழுதாகின்றன. இதில் 100 சிக்  னல்களை சரிசெய்ய மட்டுமே போது மான ஆட்கள் நம்மிடம் இருக்கிறார்  கள். மீதி 100 சரி செய்ய முடியாத தால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே துறைக் கான புதிய அறிவிப்புக்கள் மட்டுமன்றி, ரயில்வே என்ற வார்த்தையே நிர்மலா  சீதாராமனின் உரையில் இடம்பெறா ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

ஒரு ரூபாயில் வரவும் - செலவும்...

ஒன்றிய அரசு எந்தெந்த வகைகளில் வருவாயைத் திரட்டு கிறது, அந்த வருவாயை எந்நெந்த வகைகளில் செலவிடு கிறது என்பதை 1 ரூபாய் கணக்கில் நிதியமைச்சகம் வெளி யிட்டுள்ளது. இதன்படி ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 0.24 காசுகள் கடன் வாங்குவதன் மூலமும், 0.22 காசுகள் வரு மான வரி மூலமும், 0.18 காசுகள் ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் மூல மாகவும், 0.17 காசுகள் கார்ப்பரேட் வரியாகவும் 0.09 காசுகள் வரி யில்லா வருவாய் மூலமும் 0.05 காசுகள் ஒன்றிய கலால் வரியாக வும், 0.04 காசுகள் சுங்க வரியாகவும் 0.01 காசு கடனில்லா மூல தன வருவாயாகவும் ஈட்டப்படுகிறது. இவ்வாறு வரும் ஒரு ரூபாயில், 0.20 காசுகள் கடனுக்கான  வட்டி செலுத்தவும், 0.22 காசுகள் மாநில வரிப்பகிர்வுக்காகவும் 0.16 காசுகள் ஒன்றிய அரசின் திட்டங்களுக்காகவும் செல விடப்படுகிறது. மேலும் 0.08 காசுகள் ஒன்றிய அரசின் நிதியுதவி  திட்டங்களுக்கும் 0.08 காசுகள் நிதிக்குழு செலவினங்களுக்காக வும், 0.08 காசுகள் பாதுகாப்புக்கும், 0.06 காசுகள் மானியங்க ளுக்கும் 0.04 காசுகள் ஓய்வூதியத்துக்கும், 0.08 காசுகள் பிற செலவினங்களுக்கும் செலவிடப்படுகிறது. இதில், தெரியவரும் முக்கிய விஷயம், 24 காசுகள் கடன் வாங்கி, அதற்கு 20 காசுகளை வட்டியாக மட்டும் ஒன்றிய அரசு  செலுத்துகிறது.