states

ஜி.எஸ்.டி வரி பற்றி கேள்வி கேட்ட அன்னபூர்னா ஸ்வீட்ஸ் உரிமையாளரை மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்

சிவகாசி, செப்.,13-   ஜிஎஸ்டி வரி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதராமனிடம் கேள்வி எழுப்பிய அன்னபூர்னா ஸ்வீட்ஸ் உரிமையாளரை  மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். சின் சித்தாந்த மாகும். இது  ஒன்றிய பாஜக அரசின் அயோக் கியத்தனத்தின் உச்சம் என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார். சிவகாசியில்  தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டு குழு உறுப்பினர்கள்   ஆலோசனைக்  கூட்டம் நடைபெற்றது. அதில் விருதுநகர் மக்களவை  உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், சிவகாசி சட்டப்பேரவை  உறுப் பினர் ஜி.அசோகன்,   மருத்துவமனை யின் இணைஇயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், மருத்துவமனை மேம்பாட்டிற் கும்,  மருத்துவ உபகரணங்களுக்கும் ஒன்றிய அரசின் நிதியை பெற  பரிந்து ரைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, மாணிக்கம் தாகூர்   செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவ காசி இஎஸ்ஐ மருத்துவமனையின் தரம் மிகக் குறைந்துள்ளது. அரசு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை யை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சித்து வரும் பார்வையை மாற்ற வேண்டும். இது குறித்து  நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்.  எந்த ஒரு முதல்வரின் வெளிநாட்டு பயணமும் அந்தந்த மாநிலங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலி னின் வெளிநாட்டு முதலீட்டு பயணம் தென் மாவட்டங்களை புறக்கணிக்காமல் தொழில்களை பெற்றுத் தர வேண்டும். மதுரையில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொழில் வெறும் கனவாகி விடாமல் மெய்ப்பட வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் உரி மையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட ஒன்றிய பாஜக அரசின் அகங்காரத்தின்  அடுத்த நிலை. இந்த செயல்பாடு இந்தியா முழுவதுமுள்ள ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டு வதற்கான ஆதாரமாக உள்ளது எனவும்,  பெரிய- நடுத்தர அளவிலான தொழில் செய்பவர்களை மிரட்டும் ஒன்றிய அரசு, சிறு-குறு தொழில் நிறுவனங்களை எப்படி எல்லாம் மிரட்டும் என்றார். மேலும் அதானி, அம்பானி தவிர அனைத்து தொழில் முனைவோர்களையும் ஒன்றிய அரசு மிரட்டி வருவது வெட்ட வெளிச் சத்திற்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பிய வர்களை மிரட்டுவது ஒன்றிய அரசின் அயோக்கியத்தனத்தின் உச்சகட்டமாகும். இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும் . விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்த வுள்ள மது ஒழிப்பு மாநாட்டை அரசிய லாக்குவது தவறானது. மதவாத, சாதிய வாத கட்சிகள் தவிர மற்ற அனைவ ருக்கும் மாநாட்டில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் மதவாதத்தை அனை வரும் எதிர்த்து,

இந்திய வெறுப்பு அரசி யலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு பற்றி சிந்திப்பது அவசியமான ஒன்று . தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் பட்டாசு தொழில் நஷ்டமடையா மல் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற் கும் அனைத்து மாநில அரசுகளும் அனு மதியளிக்க வேண்டும். பட்டாசு தொழில் என்றாலும், வந்தே பாரத் ரயில் நிற்பது என்றாலும் ஒன்றிய அரசு விருதுநகர் மாவட்டத்தை வஞ்சிக்கிறது. பட்டாசுத் தொழிலை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் தேவை நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக பட்டாசு தொ ழிலுக்கான தனிச்சட்டம் இயற்றப்படு மென  எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்வரைவு வழங்கப்பட்டுள் ளது. பட்டாசு தொழிலையும், தொழிலாளர் கள் நலனையும் பாதுகாக்கும் விதமாக புதிய தனிச்சட்டம் இருக்க வேண்டும்.     பட்டாசு தொழிலை அழிக்கும் விதமாக புதிய சட்டம் இருக்கக் கூடாது. பட்டாசு தொழிற்சாலை பிரச்சனை குறித்து நாக்பூரிலுள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லாமல், சிவகாசியிலுள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலு வலகத்தின் மூலமாகவே உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டுமென்று வலி யுறுத்துவோம் என்றார்.