tamilnadu

img

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கைவிட வேண்டும்

திண்டுக்கல், செப்.17 - மாநில நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.  திண்டுக்கல்லில் செவ்வாயன்று இச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா, 9 ஆவது மாநில பிரதி நிதித்துவ பேரவை மற்றும் சிறப்பு மாநாடு நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் மா.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலை வர் தி.ராஜமாணிக்கம் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். வரவேற்புக் குழு தலை வர் எஸ்.எம்.ஜெயசீலன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி துவக்கவுரையாற்றினார்.  மாநில பொதுச் செயலாளர் அம்ச ராஜ், பொருளாளர் இரா.தமிழ், அரசு  ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் (பொ) சா.டேனியல் ஜெய சிங், தோழமைச் சங்க தலை வர்கள், வெங்கடேசன். ஆர்.மங்களப் பாண்டியன், அன்பரசு, எஸ்.முபாரக் அலி, சுரேஷ்குமார், டி.மகாலிங்கம், தனசீலன், கே.பிரபாகரன் (சிஐடியு), ஜெசி, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் தனது தலைமை உரையின் போது பேசுகை யில், “நமது கோரிக்கைக்காக நீதி மன்றத்திலும், வீதிமன்றத்திலும் பல போராட்டங்களை நடத்தினோம். நாம்  எந்த இடத்தில் பொருளை தொலைத் தோமோ அங்குதான் தேட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கத்  தலைவர் முத்துசுந்தரம் நமக்கு வழி காட்டினார்.

அந்த அடிப்படையில் நமக்கு வேலையிழப்பை ஏற்படுத்திய அதிமுக அரசுக்கு எதிராகப் போராடி, நமது  வேலையை நாம் மீண்டும் பெற்றோம்.  கருப்புச்சட்டை அணிந்து, சங்கு ஊதி, சாவு மணி அடித்து சென்னையில் போராட்டம் நடத்தினோம். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 41 மாதம் ஆகி யும், நமது கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எதிர்காலத்தில் நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி யுள்ளது. அதற்கான திட்டமிடல்களை இந்த மாநாடு முடிவு செய்யும்” என்றார்.

இதையொட்டி நடந்த செய்தியா ளர்கள் சந்திப்பில் சங்கத்தின் பொதுச்  செயலாளர் ஆ.அம்சராஜ் கூறியதா வது: கடந்த 25 ஆண்டுகளில் அரசின்  தவறான தனியார்மயக் கொள்கை காரணமாக 10 ஆயிரம் சாலைப் பணி யாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. பணி  நீக்கத்திற்கு எதிராக போராடி, மீண்டும்  பணி நியமனம் பெற்றிருக்கக் கூடிய எங்களுக்கு அரசின் தனியார்மயக் கொள்கை அமலாக்கத்தால் இன்னும்  பாதிப்புகள் தொடர்கிறது. இதனால் மக்களுக்கும் பாதிப்பு உள்ளது. வேலையில்லாத இளைஞர்களுக் கும் வேலையில்லாத நிலை உரு வாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பின்புலத்தில் இந்த மாநாடு நடை பெறுகிறது. தமிழக அரசின் சார்பாக  மாநில நெடுஞ்சாலைத் துறை ஆணை யம் அமைக்கப்பட உள்ளதாக அறி வித்து, அதற்குரிய பணிகள் துவங்கப் பட்டு வருகின்றன. ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யம் அமைத்ததில் ஒரு கி.மீ தூரம் சாலை அமைப்பதில் 18 கோடி ரூபாய் செலவாகக் கூடிய இடத்தில், ரூ.250  கோடி செலவழித்தது, அதில் ஊழல்  நடைபெற்றதாக தமிழக முதலமைச் சரேகூட தேர்தலில் பிரச்சாரத்தில் பேசினார். மாநில நெடுஞ்சாலைத் துறை  ஆணையம் இந்த தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணையம் போல இருக் கும் என்று மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சொன்னால், அது போன்ற அச்ச நிலைமை இங்கும் ஏற்படும்.  சுங்கச் சாவடிகளில் ஓராண்டுக்கு 4  ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாட்டில்  மட்டும் சுங்கவரி வசூலிக்கப்படுகிறது.

இனி 12249 கி.மீ சாலைகளில் 200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டால், அவற்றில் பல்லா யிரம் கோடி ரூபாய், சாதாரண மக்கள்  பேருந்துகளில் பயணம் செய்யும் போது பஸ் கட்டணத்தோடு சுங்கவரி யும் கட்ட நேரிடும்.  எனவே இந்த மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்கப்படு வதை மாநில அரசு கைவிட வேண்டும்.  இந்த ஆணையம் அமைக்கப்படு வதால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிரந்தரப் பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படும் என்ற நிலை உள்ளது. எனவே மாநில நெடுஞ் சாலை ஆணையம் மற்றும் சாலை தனி யார்மயத்திற்கு எதிரான போராட் டத்தை இந்த வெள்ளி விழா மாநாடு முன்னெடுக்கும்.  சாலைப் பணியாளர்களின் 41 மாத  கால பணி நீக்கக் காலத்தை பணிக்கால மாக மாற்ற வேண்டும். சாலைப் பணி யாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலைப் பணியா ளர்களுக்கான ஆபத்து படி, நிரந்தர பயணப்படி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அம்சராஜ் கூறினார். மாலையில் குமரன் பூங்காவி லிருந்து குடும்பத்துடன் சாலைப் பணி யாளர்கள் பங்கேற்ற பேரணி நடை பெற்றது. மணிக்கூண்டில் பொது மாநாடு நடைபெற்றது. (நநி)