court

img

பெண் மருத்துவர்கள் ஏன் இரவில் பணி செய்ய கூடாது - மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

பெண் மருத்துவர்கள் ஏன் இரவில் பணி செய்ய கூடாது என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அவர்களை பாதுகாப்பதே உங்கள் கடமை என்று மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க பெண் மருத்துவர் பாலியல் வங்கொலை வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் மருத்துவர் வேலை நேரம் 12 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற மேற்கு வங்க அரசின் 'ரட்டியேர் சாதி' திட்டத்தை குறித்து நீதிபதிகளிடம் மூத்த வழக்கறிஞர் ஹரிபிரியா பத்மநாபன் தெரிவித்தார். இந்த நிலையில், பெண் மருத்துவர்கள் ஏன் இரவில் பணி செய்ய கூடாது என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அவர்களை பாதுகாப்பதே உங்கள் கடமை என்று மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 
"பெண் மருத்துவர்களை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அவர்களுக்கு சலுகை வேண்டாம்... பெண்கள் இரவு நேரத்தில் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். பெண் விமானிகள், ராணுவ அதிகாரிகள் என அனைவரும் இரவில் வேலை செய்கிறார்கள்" என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.