states

img

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் - காலை 9 மணி நிலவரம்

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, கிஷ்த்வாரில் 14.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக புல்வாமாவில் 9.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. அனந்த்நாக்கில் 10.26%மும், தோடாவில் 12.90%மும், குல்கமில் 10.77%மும், ரம்பனில் 11.91%மும், சோபியானில் 11.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.