கும்பகோணம், செப்.17 - ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் மூலம் பயிற்சி பெற்று பல மாநிலங்கள் மற்றும் தேசிய அளவிலான ஸ்கேட் டிங் போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இவர் களுக்கு, மேற்படி அமைப்பின் மூலம் ஜோத்பூர் மாநிலத்தில், இத்தாலி நாட்டில் நடக்கும் போட்டிக்கான தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டதில் தமிழ் நாடு மாநிலத்தின் சார்பாக சென்ற விளையாட்டு வீரர்களில் 5-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஷிப்-2024 போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இப்போட்டியில் பங்குபெற கும்ப கோணம் பள்ளி மாணவர் விஸ்வரூ பன் செந்தில்குமார் தேர்வாகி உள்ளார். இவர் கும்பகோணம் தாரா சுரம் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது, கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகை ஜி.எஸ்.கே சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தஞ்சாவூர் பகுதியில் பயிற்சி அளித்து வரும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் மாநில பொருளாளர் டி.என்.ஆர்.எஸ்.ஏ. ராஜு மற்றும் அவரது குழுவி னர் ஜோஸ்.அரவிந்த் ஆகியோரிடம், மாணவர் விஸ்வரூபன் 5 வயது முதல் பயிற்சி மேற்கொண்டு வரு கிறார். மேலும் மாவட்ட, மாநில, மண்டல, தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு, பல்வேறு பதக்கங் கள் பெற்று தற்போது இத்தாலி நாட்டில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். இதனை அறிந்து, மாநிலங் களவை உறுப்பினருமான சு.கல்யா ணசுந்தரம் மாணவரை நேரில் அழைத்து பாராட்டி விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். அப்போது அந்த மாணவர், “தான் தற்போது தஞ்சாவூர் மாநக ரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றதால், இந்நிலைக்கு உயர்ந்து உள்ளேன். மேலும் தன்னை போல் கும்பகோணம் பகுதியில் இருந்து பல மாணவர்கள் தஞ்சாவூர் சென்று பயிற்சி பெறுகின்றனர். அதற்காக அவர்கள் 3 மணிநேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங் கத்தை கும்பகோணத்தில் அமைக் கும்போது, ஸ்கேட்டிங் உள்விளை யாட்டு அரங்கத்தையும் அமைக்க வேண்டுமென” மனு அளித்தார்.