மோடி பெரும் பணக்காரர்களின் கைப்பாவை. பணக்காரர்கள் சொல்வதையே மோடி செய்கிறார். ஏழைகளின் பணத்தைப் பறித்து, பெரும் பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்துள்ளார். பாஜகவினர் அரசியல் சாசனத்தை படித்திருந்தால் அவர்கள் மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பியிருக்கமாட்டார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசுவதை மகாராஷ்டிரா மக்கள் நம்ப மாட்டார்கள். மகா விகாஷ் அகாதி கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. இந்தக் கூட்டணியே மகாராஷ்டிராவை பாதுகாக்கும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பாஜக - மகாயுதி கூட்டணி காணாமல் போய்விடும்.
ஜார்க்கண்ட் மக்களின் நலனுக்காக மோடி அரசுக்கு பல்வேறு திட்டங்களை முன்மொழிந்தோம். ஆனால் திட்டங்களை அனைத்தையும் மோடி அரசு புறக்கணித்தது. ஜார்க்கண்டின் குரலை நசுக்கியது. ஜார்க்கண்ட் ஒரு போதும் தலைகுனியாது.
சிலைகள் மட்டும் பேசக் கூடியதாய் இருந்திருந்தால் உலகின் மிக உயரமான சிலையான இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் சிலை மோடிக்கு மதச்சார்பின்மை பற்றி நிச்சயம் நல்ல பாடம் கற்பித்திருக்கும்.