தஞ்சாவூர், நவ.15 - திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் (061971) வெள்ளிக் கிழமை காலை 6:20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, ஒட்டங்காடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் பேராவூரணி ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டது. அப்போது, ரயில் இன்ஜின் ஓட்டு நருக்கு அடுத்துள்ள பெட்டியில் இருந்து தண்டவாளத்தில் திடீரென அதிக சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ரயில் இன்ஜின் ஓட்டுநர், ரயிலை பார்த்த போது சக்கரம் இயக்கம் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, பேராவூரணி ரயில்வே ஸ்டேஷனுக்கு, காலை 8:17 மணிக்கு, ரயிலை மெதுவாக இயக்கிச் சென்று நிறுத்தி னார். இதனால் பயணிகள் அச்சமடைந்த னர். பின்னர், பேராவூரணி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மூலம், பட்டுக்கோட்டையில் உள்ள ரயில்வே தொழில்நுட்பத் துறை பணியா ளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பிறகு, பேராவூரணி ரயில்வே ஸ்டே ஷனுக்கு வந்த தொழில்நுட்ப பணியா ளர்கள், ஆய்வு செய்து, சக்கரம் இயங்காத பெட்டியை வேறு தண்டவாளத்திற்கு மாற்றி னர். தொடர்ந்து அந்த பெட்டியில் இருந்த பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டு, சுமார் 2:30 மணி நேரம் காலதாமதாக 11:00 மணிக்கு ரயில் காரைக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.