கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத்தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலன் விசாரித்தார். மேலும் அவருக்கு தேவையான தரமான சிகிச்சை அளிக்க இயக்குனரிடம் கேட்டுக்கொண்டார். உடன் மருத்துவமனையின் இயக்குநர் பேராசிரியர் தீபா, உள்ளுறை மருத்துவர் பிரபாகர், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேல்முருகன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.