திருவாரூர், நவ.15 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் அனைத்துத் துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் எஸ். காந்திராஜன் தலைமையில் நடை பெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் திரு வாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமசந்திரன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் க.மாரிமுத்து, வேதாரண்யம் சட்ட மன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வுக் கூட்டத்தினை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் எஸ்.காந்திராஜன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தோம். வளர்ச்சித் திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகின்றன. ஒரு மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது” என்றார். உழவு இயந்திரங்கள் வழங்கல் முன்னதாக திருவாரூர் நகராட்சி, தியாகராஜசுவாமி திருக்கோவிலில் ரூ.78.65 லட்சத்தில் கல்தேர் மண்டபம் புன ரமைப்பு பணி நடைபெற்று வருவதை யும், நன்னிலம் வட்டம், நீலக்குடியில் ரூ.6.36 கோடியில் கங்களாஞ்சேரி வட கண்டம் சாலை மற்றும் கங்களாஞ்சேரி மணக்கால் சாலை இணைக்கும் வகை யில் வெட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதையும், கொர டாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட திருக் கண்ணமங்கை ஊராட்சியில் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விதை சேமிப்பு கிடங்கு, உழவர் உற்பத்தியா ளர்கள், நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து, 3 பயனாளிகளுக்கு உழவு இயந்தி ரங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் வழங்கினார். தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி நகராட்சியில் புதிய பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு வதை இக்குழு நேரில் ஆய்வு செய்து, பணிகளை ஒப்பந்தக்கால கெடுவிற்குள் நிறைவு செய்யுமாறு நகராட்சி பொறி யாளருக்கு அறிவுறுத்தியது. திருத்துறைப்பூண்டியில் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளி மாணவியர் விடுதியினை ஆய்வு செய்து மாணவியர் தங்கி இருக்கும் இடங்கள் மற்றும் சமை யல் கூடங்களையும் பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் மூலம் 6 பய னாளிகளுக்கு தலா ரூ.5638 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.7280 மதிப் பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கினார். நிகழ்வில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் பா.சுப்பிர மணியன், துணைச் செயலாளர் சு.பால கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.