தஞ்சாவூர், நவ.15 - தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது. பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மின்சார வாரியத்தின் தன்னாட்சி உரிமையை பாதிக்கும் வாரிய உத்தரவு எண்.2-ஐ ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் செலவு செய்யப்படும் தொகையை முழுவதுமாக திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் தஞ்சா வூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைத் தலைவர் டி. மணிவண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளைத் தலைவர் அதிதூத மைக்கேல் ராஜ் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசி னார். கோரிக்கையை முன்மொழிந்து கிளைச் செயலாளர் டி.கோவிந்தராஜு பேசினார். கோரிக்கையை வலியுறுத்தி கோட்டச் செய லாளர்கள் வி.காமராஜ், சி.கணேசன் ஆகி யோர் பேசினர். கிளைப் பொருளாளர் எம்.முனியாண்டி நன்றி கூறினார். திருச்சிராப்பள்ளி அமைப்பின் திருச்சி கிளை சார்பில் வெள்ளியன்று மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பஷீர், கிளை செய லாளர் பன்னீர்செல்வம், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிளை துணைச் செயலா ளர் எஸ்.கே. செல்வராசு, பெருநகர் வட்ட தலைவர் நடராஜன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெருநகர் வட்ட செயலாளர் பழனியாண்டி ஆகியோர் பேசினர்.