districts

img

மீண்டும் வேலை வழங்க வேண்டும் காந்தி மார்க்கெட் தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.15 - திருச்சி காந்தி மார்க்கெட்டில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர்  பணியாற்றி வருகிறார்கள். சுமை  தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25  ஆண்டுகளாக சங்கம் அமைத்து கூலி உயர்வு, போனஸ், பணி பாது காப்பு உள்ளிட்ட உரிமைகளை போராடியும், தொழிலாளர் துறை மூலமாகவும் பெற்று வந்தனர். இந்நிலையில், வேஸ்ட் பேப்பர் சுமை தூக்கும் பணியாளர்கள் தீபா வளி போனஸ் குறித்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதையடுத்து போனஸ் வழங்க கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போ ராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தொழிலாளர்கள் கோரிக் கைகள் தொழிலாளர் உதவி ஆணை யர் முன்பு பேச்சுவார்த்தை நிலுவை யில் உள்ளன. இந்நிலையில், வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகள் மதுரை உயர்  நீதிமன்றம் சென்று, யாரை வேண்டு மானாலும் வேலைக்கு வைத்து  கொள்ளலாம் என தொழிற்சங்கத் திற்கு தெரியாமல் உத்தரவு பெற்று உள்ளனர். அந்த உத்தரவில் 20 ஆண்டு  காலம் அங்கு வேலை செய்யும்  42 தொழிலாளர்களை வெளியேற் றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் துறை சட்டவிரோதமாக இந்த தொழி லாளி, முதலாளி பிரச்சனையில் உள்ளே நுழைந்து பீகார் மாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அமர்த்தியுள்ள முதலாளி களுக்கும், பீகார் தொழிலாளர்களுக் கும், போலீசை நிறுத்தி பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். இந்த செயல் தொழிலாளர்கள் மத்தியில் இன மோதலை உருவாக்கும் நோக்கம்  கொண்டதாகும். மாநில அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலா கும்.  போலீசாரின் இச்செயலை கண்டித்தும், இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பல  ஆண்டுகளாக வேலை செய்து  வந்த சுமைப்பணி தொழிலாளருக்கு மீண்டும் வேலை வழங்க உரிய  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலா ளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். சிஐ டியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சிஐடியு  மாநகர் மாவட்டத் தலைவர் சீனி வாசன், மாவட்ட துணை தலைவர் மணிமாறன், மாவட்ட துணைச் செய லாளர் சந்திரன், சுமைப்பணி சங்க  மாவட்டத் தலைவர் ரமேஷ், சிபிஎம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர்.  பின்னர் போலீசார் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். அதில்  உடனடியாக தொழிலாளர் உதவி  ஆணையருடன் போனஸ் குறித்த  பேச்சு வார்த்தையை நடத்துவது. வரும் புதன்கிழமை மாவட்ட வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வேலை குறித்து பிரச்சனைக்கு தீர்வு  காண்பது. அதுவரை வேலையை நிறுத்தி வைப்பது என தெரிவித்த னர்.  இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.