மத மோதலை உருவாக்க சதி? மயிலாடுதுறை, நவ.15 - கிளியனூர் கிராமத்தில் மத மோதலை உருவாக்க திட்டமிட்டு பள்ளிவாசல் கறிக்கடையினுள் குறிப்பிட்ட சில சமூக விரோதிகள் மதவெறி அமைப்புகளுடன் இணைந்து இரவோடு, இரவாக விநாயகர் சிலையை வைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள கிளியனூரில் அதிகளவில் இஸ்லா மியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமய மக்களும் வசித்து வருகின்றனர். எந்தவித மத பாகுபாடின்றி ஒற்றுமையாக வசித்து வரும் அக்கிராம மக்களின் ஒற்று மையை சீர்குலைக்கும் நோக்கில் சில மதவெறி இந்து அமைப்பு களின் தூண்டுதலின் பேரில், அப்பகுதியிலுள்ள சின்னப் பள்ளி வாசல் கறிக்கடையினுள் வெள்ளி யன்று அதிகாலை 4 மணியளிவில் அதேப் பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சில நபர்கள் விநாயகர் சிலையை வைத்துள்ளனர். அதுகுறித்து தகவலறிந்த வரு வாய்த்துறை, காவல்துறை அதி காரிகள் விநாயகர் சிலையை அப்புறப் படுத்தி எடுத்துச் சென்றனர். இச்சம் பவம் அப்பகுதியில் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. அமைதிப் பேச்சு இதனிடையே வெள்ளியன்று காலை பெரம்பூரில் உள்ள வரு வாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை யில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. வட்டாட்சியர் மகேஷ், டிஎஸ்பி திருப்பதி, வருவாய் ஆய் வாளர் அருண், கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், கிளியனூர் ஊராட்சி தலைவர் ஹாலிது மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி காக்குமாறு வலியுறுத்தினர். மீண்டும் ஓரிரு நாட்களில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக வரு வாய்த்துறை, காவல்துறை அதிகாரி கள் கூறியுள்ளனர். ஒற்றுமையுடன் வசிக்கும் மக்களி டையே மோதலை உருவாக்க முயற் சிக்கும் சமூக விரோத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்ப தோடு, கிளியனூர் கிராமத்தில் அமைதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.