சென்னை,ஜனவரி.23- பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ஜாமினில் வெளிவரமுடியாத அளவிற்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த ஜனவரி 10ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அடுத்தகட்டமாக இந்த சட்ட மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.