இந்திய இளைஞர்கள் அதிகளவு லிவ்-இன் உறவில் வாழத் துவங்கியுள்ள நிலையில் அவ்வுற வில் சமூக ஒழுக்கங்களைப் பாதுகாப்ப தற்காக சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருமண பந்தத்திற்குள் நுழையா மல் ஒன்றாக இணைந்து வாழும் லிவ்- இன் உறவுக்கு அங்கீகாரம் இல்லை யென்றாலும்,அதிகளவிலான காதலர் கள் அவுறவில் இணைந்து வாழும் நிலை யில் இத்தகைய வழிமுறைகள் அவசி யம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்றாகக் கூடி சிந்தி த்து அது தொடர்பாக சில கட்டுப்பாடுக ளையும், அதற்கான தீர்வினையும் கண்டு பிடிக்க வேண்டிய நேரம் இது என்று அல காபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தெரி வித்துள்ளார்.