போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் ஹமாசுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் பிரண்டின் (பிஎஃப்எல்பி) இடதுசாரித் தலைவரான கலிதா ஜரார் விடுதலையாகியுள்ளார். நீண்ட காலமாக பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜரார், இஸ்ரேல் ராணுவத்தால் அரசியல் பணயக்கைதியாக காற்றோட்டம் இல்லாத தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.