states

img

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. புதிய திரிபு வீரியம் குறைவாகவே உள்ளது என்றும் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
 இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக 24 மணி நாரத்தில் இந்தியாவில் 12 பேர் உயிர்ழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 300 கடந்துள்ளது.
   தமிழகத்தில் கரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. தனித்தனியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய திரிபு வீரியம் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அன்றாடம் 500 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு 150 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. அதுபோல் பிபிடி கிட்கள், மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.எனஎன  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செஇதியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.