சென்னை, ஜூன் 14- நடந்து முடிந்த மக்களவைத் தேர்த லில், தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணி வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்றது. இதையொட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்க ளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு திமுகவை வழி நடத்திச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகியவை கோவை கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கி. வீரமணி (திக), கு. செல்வபெருந்தகை எம்எல்ஏ (காங்.), வைகோ எம்.பி. (மதிமுக), கே. பாலகிருஷ்ணன் (சிபிஎம்), இரா. முத்தரசன் (சிபிஐ), தொல். திருமா வளவன் எம்.பி. (விசிக), கே.எம். காதர் மொகிதீன் (ஐஎம்எல்யு), கமல்ஹாசன் (மநீம), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக), தி. வேல்முருகன் (தவாக), எம்.எச். ஜவா ஹிருல்லா (மமக), இரா. அதியமான் (ஆதித்தமிழர் பேரவை) ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.