states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இலங்கைக்கு  இந்தியா உதவி

இலங்கையின் கல்வி, சுகாதாரத் துறைகளின் மேம்பாட்டுத்  திட்  டங்களுக்காக இந்திய அரசு ரூ.237  கோடி வரை நிதியுதவி வழங்கவுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக வந்து சென்ற பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் நளின்டா  ஜெயதிசா கூறுகையில், இலங்கை- இந்தியா இடையே சமூக, பொருளா தார அபிவிருத்தி மற்றும் இருதரப்பு உறவு களை மேம்படுத்துவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கான முன்மொழிவிற்கு அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்  பந்தத்தின் கீழ் இலங்கையின் கல்வித்  துறைக்காக ரூ.31கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.78 கோடி, விவசாயத்துக்கு ரூ.62 கோடியை இந்தியா வழங்கும். இந்த திட்டங்கள், உள்கட்டமைப்பு, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள் ளன என குறிப்பிட்டுள்ளார்.

பதவி நீக்க நோட்டீஸ் துருப்பிடித்த கத்தி  ஜகதீப் தன்கர் ஆணவப்பேச்சு

ஜகதீப் தன்கர் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவி நீக்க தீர்  மான நோட்டீஸ் ஒரு  துருப்பிடித்த  கத்தி என ஆணவத்துடன் பேசியுள்ளார்.    மாநிலங்களவை தலைவரும், துணை  ஜனாதிபதியுமான ஜகதீப் தன்கர் தனது  அதிகாரத்தை தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக பயன்படுத்தி வருகிறார். பார பட்சமாக நடந்து கொள்கிறார். அவை செயல்பட மிகப்பெரிய இடையூறாக இருக்கிறார் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.  இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஜகதீப்  தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி  நீக்க தீர்மான நோட்டீசை கொண்டு வந்தன.  இந்த நோட்டீஸ் அவையின் துணைத்  தலைவர் ஹரிவன்சால் நிராகரிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரி கையாளர்களிடையே பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நோட்டீஸ்,  ஒரு துருப்பிடித்த கத்தி. நல்லவேளை நீங்கள் அந்த நோட்டீசை பார்க்கவில்லை.  பார்த்திருந்தால், தூக்கமே வந்திருக் காது’’ என ஆணவத்துடன் கூறியுள்ளார்.

முன்அனுமதி பெற்றே  ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்

சென்னை,டிச.25-  தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த வேண்டும், காளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் சத்யபிரதா சாகு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும், இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் போதே காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மருத்துவக்குழுக்கள் போட்டி நடைபெறும் களத்தில் இருந்து காளைகள் வெளியேறும் இடத்தில், கால்நடை மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடுதல் என அனைத்து போட்டிகளுக்கும் பொருந்தும். இவற்றைப் பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோரின்  குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

சென்னை,டிச.25- தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமம், பொன்வேல் பெட்ரோல் பங்க் எதிரில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 நபர்களில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், அலங்கியம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (38) செல்வராஜ் (38) மற்றும் விக்னேஷ் (31) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்திருக்கும் முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜ்குமார் (35) மற்றும் மகேஷ் குமார் (33) ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.  

டிச.31 வரை மிதமான  மழை பெய்யும்

சென்னை,டிச.25- தெற்கு ஆந்திர – வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும். இதனால், தமிழ கத்தின் கடலோர மாவட்டங் களில் ஒரு சில இடங்களி லும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் டிசம்பர் 26 அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், டிசம்பர் 29 முதல்  31 வரைக்கும் தென் தமிழ கத்தில் ஒரு சில இடங்களி லும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமித் ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

சென்னை, டிச.25- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  27 ஆம் தேதி சென்னை வருகிறார். அண்ணல் அம்பேத்கரை பகிரங்கமாக அவமதித்து பேசிய அமித் ஷா வுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெரு ந்தகை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப் படுத்துவதற்கு அமித் ஷா வுக்கு கருப்புக் கொடி காட்டப் படுகிறது. இந்த போராட்டத் தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை மோடி, அமித் ஷா உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் உணர வேண்டும் என்று அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்.