states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கத்தை இணைத்திடுக! தமிழக அரசுக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 9 - பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 ரொக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர் பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 1000 ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது. இது தமிழக மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பையும் பண்டிகையை  மகிழ்ச்சி யுடன் கொண்டாடுவதற்கான சூழலையும் ஏற்படுத்தியது. தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் அறி விக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கப் பரிசு இல்லை. கடுமையான வெள்ளப் பாதிப்பு, பெஞ்சால் புயல் பாதிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள குடும்பங்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாட தமிழக அரசு  உடனடியாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கிட வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

“மக்கள் பிரதிநிதிகளிடமே கல்வி அதிகாரம்” சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை

சென்னை, ஜன.9 - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே கல்வி அதிகாரம் இருக்க வேண்டும் என்று சட்டப்பேர வையில் முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வலியுறுத்தினார். பல்கலைக்கழ கங்களில் துணைவேந்தர்களை நிய மிப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை சிதைக்கும் வகையில் கல்வித்துறை யில் தொடர்ச்சியாக தடைகள் ஏற்படுத்தப்படுவதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் திணிப்பு, பொதுத்தேர்வு என்ற பெயரில் மாணவர்களை வடிகட்டும் முயற்சி,  நீட் தேர்வில் தொடரும் முறைகேடு கள் ஆகியவற்றை அவர் கடுமையாக எதிர்த்தார். பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரி டம் வழங்குவது கல்வி நிறுவனங் களின் சுயாட்சியைப் பாதிக்கும் என் றார். மேலும், மாநில அரசுகளின் கட்டுப் பாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டார். ஒன்றிய அரசு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருவ தோடு, தமிழகத்தில் புதிய உயர்கல்வி  நிறுவனங்களை அமைக்கவும் தவ றியுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதோடு, ஐ.ஐ.டி போன்ற நிறு வனங்களில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு விதிகளை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் விமர்சித்தார். இறுதியாக, தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப் படுவதை ஏற்க முடியாது என்றும், இந்த விதிமுறைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

தில்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மிக்கு சிவசேனா (உத்தவ்) ஆதரவு

70 தொகுதிகளைக் கொண்ட தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மதியம் அறிவித்தது. இந்நிலையில், தில்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு வழங்குவதாக சிவசேனா (உத்தவ்) கட்சி அறிவித்துள்ளது.