states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒவ்வொரு இன மோதலும் மனிதகுலத்தை காயப்படுத்துகிறது. மனிதர்களுக்குள் கசிந்து கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை எப்படிப் புகுத்துவது என்று சிந்திக்கும்போது ஸ்ரீ நாராயண குருவின் செய்திகளின் பொருத்தம் இன்னும் தெளிவாகிறது. குருவை சனாதன தர்மத்தின் ஆதரவாளராக சித்தரிக்க திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது. ஆனால் குரு சனாதன தர்மத்தை ஆதரிப்பவராக ஒரு போதும் இருந்தது இல்லை.

அயோத்தி மக்கள் பாஜகவை தோற்கடித்தது போல், ஒட்டுமொத்த தேசமும் பாஜகவை அகற்றும் எண்ணத்தில் உள்ளது. அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

துணைநிலை ஆளுநர் அலுவலகம் தான் தில்லி பாஜகவின் மாநில தலைமை அலுவலகம் ஆகும். தில்லியின் மிகப்பெரிய பாஜக தலைவராக துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா செயல்பட்டு வருகிறார்.

கேரளாவை “மினி பாகிஸ்தான்” என்று முத்திரை குத்திய மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானேவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். நிதேஷ் ரானேவின் வகுப்புவாதமிக்க விஷமான அறிக்கை கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, அரசியலமைப்பை மீறுவதாகவும் உள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2024-25 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2025 ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விநியோகம் செய்வதற்காக ரூ.2.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி அல் அமினி  உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பைரேன் சிங் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்து, பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2025-ஆம் ஆண்டுக்குள் மணிப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.