முதல்வர் மீது ஆளுநர் ஆத்திரம்
சென்னை, ஜன.12- சட்டசபையில் உரையாற்றாமல் வெளிநடப்பு செய்த ஆளுநரின் செயலை ‘சிறுபிள்ளைத்தனமானது’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஆளுநர் ரவியின் எரிச்சலை வெளிப்படுத்தும் விதமாக ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளத்தில் கடுமையான பதிவொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12 அன்று சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 176-ன் படி, ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். ஆனால் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பேசிய முதல்வர், “திட்டமிட்டு விதிமீறல் செய்வதிலேயே ஆளுநர் குறியாக இருக்கிறார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை” என விமர்சித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேசிய கீதத்திற்கு மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றச் சொல்வதையும் முதல்வர் ‘அபத்தம்’ என்கிறார். இந்தியாவை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பை மதிக்காத தலைவராக முதல்வர் இருக்கிறார். இத்தகைய ஆணவம் நல்லதல்ல” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்
சென்னை,ஜன.12- தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜன.11) வரை 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தை பொங்கலை சிறப்பாகக் கொண்டா டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாய விலைக் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆயிரம் கூட்டுறவு துறை பணி யாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 1 கோடியே 47 லட்சத்து 07 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் 67 சதவீதம் பணி கள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடை பெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ரூ..700 கோடி வரி ஏய்ப்பு?
சென்னை,ஜன.12- ஈரோடு ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன் தொடர்பான இடங்க ளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி னர். இவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஆவார். 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ராம லிங்கம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தில்லியில் அதிர்ச்சி பாஜக எம்.பி.,யின் இல்லத்திலேயே போலி வாக்காளர்கள்
70 தொகுதிகளை கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்கு கள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், தோல்வி பயத்தால் பணப் பட்டுவாடா, மதவெறியை கிளப்பும் பேச்சு, வாக்காளர்களை நீக்குதல் உள்ளிட்ட இழிவான வேளைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான அளவில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர்களை சேர்த் தல் மற்றும் நீக்குதல் போன்ற வேலை களை தேர்தல் அதிகாரிகள் மூலம் பாஜக நிகழ்த்தி வருகிறது. இதனை ஆதாரத்து டன் ஆம் ஆத்மி கட்சி இரண்டு நாட்களு க்கு முன் போட்டுடைத்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கையை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். ”பாஜக எம்.பி.,யின் இல்லத்திலேயே போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள் ளது” என குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகை யில்,”தலைநகர் தில்லியில் பாஜக எம்.பி.,யின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தே 24 போலி வாக்காளர்கள் பதிவு செய்யபட்டுள்ளது. இது நமது ஜனநாய கத்தின் மீதான மோசடி மட்டுமின்றி கடு மையான கிரிமினல் குற்றமாகும். பாஜக வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை: 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்
சென்னை,ஜன.12- பொங்கலுக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதால், அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 19 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களில் பணிபுரிவோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்கள் எந்தவித சிரமமின்றி பயணிக்கும்வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும், வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1314 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 1.8 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். தொடர்ந்து இரண்டாம் நாளான சனிக்கிழமையும் (ஜன. 11) இயக்கப்பட்ட 4107 பேருந்துகளில் 2.2 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 4.12 லட்சம் பேர் பயணித்துள்ளனர். மேலும் பேருந்துகள் குறித்த விவரங்கள், புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையா இணையர் மறைவு : கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
சென்னை,ஜன.12- தமிழறிஞர் சாலமன் பாப்பையா இணையர் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழ் அறிஞர், நாடறிந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களுடைய இணையர் ஜெயாபாய் அம்மையார் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அன்னாரது இழப்பால் வாடும் சாலமன் பாப்பையா மற்றும் குடும்பத்தார், உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம்
புதுச்சேரி,ஜன.12- புதுச்சேரி மாநிலத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருசக்கர வாகன விபத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 140 பேரும். 2024 ஆம் ஆண்டு 123 பேரும் பலியாகினர். இதனால் இந்தாண்டு சாலையில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை முடிவு செய்தது. அதன்படி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஜனவரி 12 முதல் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவர்க ளின் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை
இராமேஸ்வரம், ஜன.12- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களிடம் இருந்து 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை, காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சென்னை, ஜன.12- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விமானடிக்கெட் ஹவுஸ் புல் ஆனது. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதிகமாகக் காணப்பட்டது. சனிக்கிழமை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதைவிட அதிகமாக இருந்தது. இதையடுத்து வழக்கம் போல், சென்னை விமான நிலையத்தில், விமான டிக்கெட்டுகள் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,200 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல், ஜன.12- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், ஞாயிறு காலை நிலவரப்படி, ஓகேனக்கலில் நீர்வரத்து 1,200 கனஅடியாக குறைந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்து டன் பரிசல் பயணம் மேற்கொண்டனர். மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வ முடன் கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சீமானின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி எதிர்ப்பு
சென்னை,ஜன.12- திராவிடம், பெரியார் குறித்து சீமான் கூறியது அவ ரது சொந்தக் கருத்தே என்றும் சீமான் பேசியிருப் பது இந்துத்துவாவின் வளர்ச்சிக்கே உதவும் என் றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செகதீச பாண்டியன் சாடி யுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘ திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பது தான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியி ருப்பது இந்துத்துவா சக்தி களின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது. நாம் தமிழர் கட்சியை துவக்கியதும், அன்றைக்கு அரவணைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிஸ்ட்டுகள் தான் என்று தெரிவித்துள்ளார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் உள் ஒதுக்கீடு குறைப்பு
சென்னை,ஜன,12- முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு 8 விழுக்காடாக குறைக்கப் பட்டு, அமைச்சு பணியாளர்க ளுக்கு 2 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ள தாவது: அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியம னத்தில், இடைநிலை ஆசிரி யர்களுக்கு 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டு வருகிறது. இந்த ஒதுக் கீட்டை 8 விழுக்காடாக குறைக்கவும், உரிய கல்வித் தகுதி கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சு பணி யாளர்க ளுக்கு (கண்கா ணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட் டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர்) 2 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கவும், அதற்கு ஏற்ப விதிமுறை களில் திருத்தம் செய்யுமா றும் அரசுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கருத்துரு அனுப் பியுள்ளார். அதை ஏற்று, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கல்விப் பணி சிறப்பு விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள் முதல்வர் பொங்கல் வாழ்த்து
சென்னை,ஜன.12- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு, திமுக தொண்டர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து இருக்கும் முக ஸ்டாலின், தை மகளை வரவேற் போம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “பொங்கல் தமிழரின் தனிப் பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைகலன்! உழைப்பையும் உழவை யும் இயற்கையையும் போற்றும் மதச் சார்பற்ற சமத்துவப் பெருநாள்! இதை மாநிலமெங்கும் கலை, விளை யாட்டு நிகழ்வுகளுடன் ஏற்றத்துடன் கொண்டாடிடுவீர்!” என தெரிவித்தி ருக்கிறார்.