செங்கல்பட்டு, ஜன. 12- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 6ஆவது மாநாடு ஞாயிறன்று (ஜன.12) மாவட்டத் தலைவர் வி.ஞானசம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. எத்திராஜூலு வரவேற்றார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.மோகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் என்.அருணாச்ச லம் வேலை அறிக்கையும், பொருளாளர் கதிர்வேல் வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.விஜயகுமார், செங்கல்பட்டு தலைமை அஞ்சலக அதிகாரி கே.வசந்தி, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி செல்வமணி ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் கே.ராகவேந்திரன் பேசினார். தீர்மானங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ள 18 மாத அகவிலைப்படி திரும்ப வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில்வே பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், கம்யூடேசன் காலத்தை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது சங்கத்தின் மாவட்டத் தலைவராக வி.ஞானசம்பந்தன், செயலாளராக என்.அருணாச்சலம், பொருளாளராக என்.கதிர்வேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.