பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் அதிக மலைப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். குறிப்பாக நக்சல்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதி என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பஸ்தர் ரேஞ்ச் காவல் துறை ஐஜி சுந்ததரராஜ் கூறுகை யில்,”இந்திராவதி தேசிய பூங்காவுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சல் எதிர்ப்பு கூட்டு தேடுதல் வேட்டையின் போது சீருடை அணிந்த மூன்று நக் சலைட்டுகளின் சுட்டுக்கொல்லப்பட்ட னர். நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கி, வெடிபொருகள் மீட்கப்பட்டன” என அவர் கூறினார்.