திருவள்ளூர், ஜன.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் தோழர் முனியம்மாள் காலமானார்.அவருக்கு வயது 63. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகில் உள்ள திருப்பேர் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினராக பணியாற்றியவர். இவர் சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிறன்று (ஜன.12), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் எம்.சி.சீனு, ஆ.டிக்சன், கிளை நிர்வாகிகள் தேவராஜ், கோவிந்தராஜ், ரவிச்சந்திரன், சுரேஷ், கட்டுமான சங்கத்தின் மாவட்ட நிர்வாகி வி.ஆர்.லட்சுமணன் உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான திருப்பேர் கிராமத்தை உள்ள மயானத்தில் மாலை அடக்கம் செய்யப்பட்டது.