பாஜகவின் இழிவான அரசி யலால் மணிப்பூர் மாநிலம் 20 மாதங்களுக்கு மேல் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த வன்முறைக்கு 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக இயல்பு நிலையற்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூரின் சுரா சந்த்பூர், தெங்னௌபால் மாவட்டங்க ளில் அதிநவீன ஆயதங்கள் மீட்கப் பட்டுள்ளன. சுராசந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய கெல்மோல் கிராமத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஏகே-56 ரைபிள் உட்பட 7 துப்பாக்கிகள் மற்றும் ஒரு சீன கையெறி குண்டுகள் ஆகியவை மீட்கப் பட்டதாக காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல தெங்னௌபாலில் உள்ள மோரேக் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கோவஜங் பகுதியில் பாது காப்புப் படையினரின் தேடுதல் வேட்டை யில் தலா 1 கிலோ எடையுள்ள இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் மற்றும் கிட்டத்தட்ட 5 கிலோ எடை யுடன் ஒரு ஐஇடி குண்டுகளும் மீட்கப் பட்டுள்ளது.