தில்லியில் பாஜகவிற்கு நிகழ்ச்சி நிரல், தொலைநோக்கு பார்வை, முதல்வர் முகம் என எதுவும் கிடையாது. அதனால் தான் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளனர். வழக்குகள் மூலம் மிரட்டினாலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்.
சிஏஜி அறிக்கையில் தில்லி மாநில கருவூலத்துக்கு ரூ.2000 கோடி நஷ்டம் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய கலால் கொள்கையில் ஊழல் நிகழ்ந்து இருக்குமோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. குறிப்பாக சிஏஜி அறிக்கையின் மூலம் ஆம் ஆத்மியின் தந்திரம் உடைந்துள்ளது.
ஒன்றிய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளுக்கு இடையே ‘மோதல்’ தீவிரமடைந்து வருகிறது. இரு பாஜக அரசுகளும் மக்கள் நலனை எதிர்கொள்ளாமல் மோதலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இது நல்லதல்ல.
எத்தனை மணி நேரம் பணிபுரிகிறேன் என்று என்னிடம் கேட்காதீர்; என் பணியின் தரம் எப்படி என்பதைக் கேளுங்கள். எனது மனைவி அற்புதமானவர், அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். உங்களுடைய வீட்டிலும், அதேபோல உங்கள் நண்பர்களுடனும் நீங்கள் நேரம் செலவழிக்காமல் இருந்தால், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு சரியான ஆலோசனைகள் எப்படி கிடைக்கும்?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகிய நிலையில், 16 மணிநேரம் நீடித்த மீட்பு பணிக்கு இடையே 28 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.’
தில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உள்பட செல வுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப் படுவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி அறி வித்து, இதற்காக நன்கொடை திட்டத்தையும் துவங்கியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தின் காடுகளிலிருந்து 3 நவீன வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப் பற்றியுள்ளனர். மேற்கு சிங்பம் நக்சல்கள் நட மாட்டம் அதிகமுள்ள பகுதியாகும்.