states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்   புயலாக மாற வாய்ப்பு 

சென்னை,நவ.21- தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்ட லம் உருவாக உள்ள நிலை யில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நவம்பர் 25 -ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும், 26, 27ஆம் தேதி கன முதல், மிக கன மழைகான வாய்ப்பு  இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 26, 27ஆம் தேதி களில் கடலோர ஆந்திரா விலும், கேரளாவில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வும் அறிவித்துள்ளது.  இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள் ளனர். தற்போது, வங்கக் கட லில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் மீனவர் நலத் துறை தெரிவித்துள்ளது.  மேலும், அறிவிப்பினை மீறி கடலுக்கு செல்லும் மீன வர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை மாவட்ட மீன வர் நலத்துறை உதவி  இயக்குநர் மோகன்குமார் அறிவிப்பு வெளியிட்டுள் ளார்.

10,080 கிலோ வாக்குப்பதிவு நாளில்  வெள்ளி பறிமுதல்

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம் பர் 20 (புதன்கிழமை) அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், வாக்குப்பதிவு நாளான புதன்கிழமை காலை 6 மணிய ளவில் வாகன சோதனையின் போது தால்னர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் நாக்பூர் நோக்கிச் சென்ற லாரியில் இருந்து 10,080 கிலோ வெள்ளி  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக ரூ.100 கோடி  இருக்கும் என தேர்தல் செலவு பார்வை யாளர்கள் மற்றும் வருமான வரித்துறை யினர் தகவல் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 15 முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட பணம், பரி சுப்பொருட்கள், மதுபானம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதன்மதிப்பு ரூ.706.98 கோடி என மகாராஷ்டிரா தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான வினோத் தாவ்டேமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 20 கோடி பணமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.பி.எஸ்.இ 10,  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை,நவ.21- சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில்   2025ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் நவம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்டன. 10 ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ஆம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20 ஆம் தேதி அறிவியல்  தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும்,  மார்ச் 10 ஆம் தேதி கணிதம், மார்ச் 13 ஆம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி  தொழிற்கல்வி பாட தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி இயற்பியல், 24ஆம் தேதி புவியியல், 27 ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளது. பொதுத்தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை, மாணவர்கள் www.cbse.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஒன்றிய கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் பெரும்பான்மையான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும் என்றும், சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு என்பது 2025 பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெற உள்ளது.

அமைச்சர் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!

சென்னை,நவ.21- சென்னையில் இருந்து வியாழக்கிழமை (நவ.21)  காலை 6 மணிக்கு தூத்துக்குடிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 77 பயணிகள் பயணம் செய்தனர். அதே சமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அதிக மேகமூட்டம் காரணமாக ஏற்பட்ட  மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது.  இதன் காரணமாக சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. இருப்பினும் தொடர்ந்து அங்கு நிலவி வந்த மோசமான வானிலை  காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக சுமார் 8 மணி அளவில் மதுரை  விமான நிலையத்தில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 77 பயணிகள் மதுரை விமான நிலையத்தி லிருந்து சொந்த ஊர்களுக்கு கார் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு  தனி ஓய்வறை அமைக்க உத்தரவு

கோவை,நவ.21- கோவையில் அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  கோவை அரசு கலைக்கல்லூரி, கோவை புலியகுளம் அரசு கலைக்கல்லூரி, தொண்டாமுத்தூர், வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 6 அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைக்க உத்தரவிட்டு, நிதிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி களுக்கு மாதவிடாய் காலத்தின்போது ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனையால் அவர்களுக்கு  ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் தனி ஓய்வறை செயல்பட உள்ளது. இந்த அறையில் மாணவிகள் ஓய்வு எடுக்கும் வகையில் 4 சாய்வு நாற்காலி, திரைச்சீலை மற்றும் கண்ணாடி, உணவு சாப்பிடும் மேஜைகள், முதலுதவி பெட்டி, அடிப்படை மருந்துகள், மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவிகளுக்கான ஓய்வறைகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று உயர்கல்வி இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.