states

img

தீபாவளிக்கு முன்பே மூச்சுத் திணறும் தில்லி

நாடு முழுவதும் வியாழனன்று தீபாவளி பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. வழக்கமாக தீபாவளி தினத்தன்று கொளுத்தப்படும் பட்டாசு மற்றும் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் எரிக்கப்படும் கோது மை பயிர்களின் வைக்கோல் மாசு கார ணமாக தில்லியின் காற்று தரத்தை வெகு வாக குறைக்கும். அடுத்து குளிர் காலத்தில் பனிமூட்டம் காரணமாக தில்லி புகைமண்டல பகுதியாக மாறும். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு முன்னரே காற்று மாசு காரணமாக தில்லி மூச்சு விட முடியாமல் திணறி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரத்தின் குறியீடு 278 ஆக இருந்தது. முந்தைய நாளில் இது 268 ஆக இருந்தது. ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின் படி, ஆனந்த் விகார், அசோக் விகார், அயா நகர், பவானா, ஜஹாங்கீர்புரி, முந்த்கா, விவேக் விகார், வஷிர்புர் ஆகிய எட்டு இடங்களில் காலையில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. குளிர் காலம் நெருங்கி வரும் சூழலில், தீபா வளிக்கு முன்பே காற்று மாசால் தில்லி திணறுவது வரும் காலங்களில் மோச மான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்ச ரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.