100 நாள் வேலை சம்பளப் பாக்கியை வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை, ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேர வையில் சனிக்கிழமை (ஜன.11) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசும்போது, தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படாமல் உள் ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால், பாக்கி வைத்திருக்கும் கூலித் தொகையை முழுமையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.'
இடைத்தேர்தல் அதிமுக, தேமுதிக புறக்கணிப்பு
சென்னை, ஜன.11- ஈரோடு கிழக்கு சட்டமன் றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்தது. ஆட்சி அதிகாரத்தை திமுக தவறா கப் பயன்படுத்தும் என்ப தால், ஈரோடு கிழக்கு சட் டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர் தலை அதிமுக புறக்கணிப்ப தாக, எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவை அடி யொற்றி அதன் கூட்டணியாக இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்க ணிப்பதாக அறிவித்துள்ளது.
தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை கடந்தது
சென்னை, ஜன.11- தங்கம் விலை சனிக் கிழமையன்று தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்தது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்க ளில் சனிக்கிழமையன்று 22 கேரட் தங்கம் கிராமிற்கு ரூ. 15 அதிகரித்து ரூ. 7 ஆயிரத்து 300-க்கும், 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ. 120 அதிக ரித்து ரூ. 58 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராமிற்கு ரூ. 17 அதிகரித்து ரூ. 7 ஆயிரத்து 964-க்கும், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ. 136 அதிகரித்து ரூ. 63 ஆயிரத்து 712-க்கும் விற்பனையானது.
போக்குவரத்து - ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
சென்னை, ஜன.11- தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் களுக்கு, பொங்கலை முன் னிட்டு 2024-ஆம் ஆண்டுக் கான சாதனை ஊக்கத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர் களுக்கு ரூ.625 ஊக்கத் தொகையாக வழங்க உத்த ரவு பிறப்பிக்கப்பட்டு உள் ளது. இதுதவிர பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு வதன் ஒரு பகுதியாக ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊக் கத்தொகை அறிவிக்கப் பட்டு உள்ளது. விற்பனை யாளர் மற்றும் ஊழியர் களுக்கு ஊக்கத்தொகை யாக அவர்கள் பணியில் கை யாளும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 50 காசு ஊக் கத்தொகை வழங்க கூட்டு றவுத்துறை உத்தரவு பிறப் பித்துள்ளது.
‘இந்திய பொருளாதாரம் 2025-இல் பலவீனமாகும்!’'
வாஷிங்டன், ஜன.11- 2025-ஆம் ஆண்டு சர்வதேச அள வில் சீரான பொருளாதார வளர்ச்சி இருந்த போதிலும் இந்திய பொருளா தாரம் சிறிதே பலவீனமாக இருக்கும் என்று ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார். அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையை சுற்றி இந்த ஆண்டு பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை நிலவலாம் என எதிர்பார்ப்பதாகவும் ஜார்ஜீவா குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன்னில் வெள்ளிக்கிழ மையன்று ஆண்டு செய்தியாளர் சந் திப்பில் பேசிய கிறிஸ்டலினா ஜார் ஜீவா, “2025ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் சிறிதளவு பலவீன மாக இருக்கும். அதே நேரத்தில் முன்பு எதிர்பார்த்ததை விடவும் அமெரிக்கா வில் நல்ல சூழல் நிலவும். ஐரோப்பிய யூனியனில் தடுமாற்றம் இருக்கும். பிரேசில் அதிக பணவீக்கத்தை எதிர் கொள்ளும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் உள் நாட்டு தேவையில் பணவாட்ட அழுத் தம் மற்றும் தொடர்ச்சியான சவால் கள் இருப்பதை ஐஎம்எப் கண்டது. குறைந்த வருவாய் நாடுகள் அனை த்து முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எந்தவொரு புதிய அதிர்ச்சியும் அவைகளை மிகவும் எதிர்மறையாக பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. 2025ஆம் ஆண்டைப் பொறுத்த வரை நாம் என்ன எதிர்பார்க்கின் றோம் என்றால், குறிப்பாக பொருளா தார கொள்கை விதிகளை பொறுத்த வரை பெரும் அளவுக்கு நிச்சயமற்ற தன்மை இருக்கும். அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டிரம்ப், சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் கட்ட ணங்களை அமல்படுத்துவார். உலக பொருளாதாரத்தை சரிவை நோக்கி தள்ளாமல் இருக்க பண வீக்கத்துக்கு எதிராக போராட வேண் டும் எனில் உயர்ந்தபட்ச வட்டிவிகி தத்தை நாம் எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு கிறிஸ்டலினா ஜார் ஜீவா தெரிவித்துள்ளார்.
பத்தனம்திட்டாவில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை
கேரள மாநிலம் பத்தனம்திட்டா வில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது செய் யப்பட்டனர். 18 வயது தடகள வீராங்கனை யான இளம்பெண்ணுக்கு 13 வயதில் இருந்து சுமார் 60 பேருக்கு மேல் பாலி யல் தொல்லை அளித்ததாக புகா ரில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் உற வினர்களே பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் முதற்கட்ட விசாரணை யில் தகவல் வெளியாகி உள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 பேரி டம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித் துள்ளனர்.
ரயில் நிலைய கட்டுமானப் பணியில் விபத்து உ.பி.யில் 3 பேர் பலி
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணி யின்போது, கட்டடம் சரிந்து விபத்து ஏற் பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 35 தொ ழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண் டனர். தீயணைப்பு மற்றும் மாநில பேரிடர் படையினர் மேற்கொண்ட மீட்பு பணியில் 3 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர்.
உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமன மசோதா நிறைவேறியது
சென்னை,ஜன.11- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. தனி அலுவலர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான, ஊராட்சிகள் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். 28 மாவட்டங்களின் ஊராட்சிகளுக்கு வழக்கமான தேர்தல்கள் நடத்தப்படும் வரை அல்லது இந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி இதில் எது முந்தியதோ, அதுவரை 28 மாவட்டங்களின் ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்க, அரசுக்கு அதிகாரம் அளிக்க, ஊராட்சிகள் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அறிமுக நிலையில் அதிமுக, பாமக எதிர்ப்பு தெரிவித்தன. அதிகாரம் இல்லாத மாவட்ட பஞ்சாயத்து: சிபிஎம் இந்த மசோதா மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர் நியமனம் என்பது ஒரு மாற்று ஏற்பாடுதான். எனவே, உரிய நேரத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது தெரியவில்லை. அந்த அளவுக்குத்தான் அதன் செயல்பாடுகள் உள்ளது. எனவே, மாவட்ட ஊராட்சியை அதிகாரமிக்க அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தனி அலுவலர் பதவியை நீட்டிக்க கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றகுழுத் தலைவர் டி.ராமச்சந்திரன், கே.பி.அன்பழகன் (அதிமுக), ஜி.கே.மணி (பாமக) ஆகியோரும் பேசினர். இதற்கு அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கமளிக்கையில், உள்ளாட்சி அமைப்பு தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கம் கிடையாது. தொகுதி சீரமைப்பு, எல்லைகள் மறுவரையறை பணிகளை விரைவாக முடித்து தேர்தல் நடத்தும். கருத்து கேட்பு கூட்டங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
சென்னை,ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற் றப்பட்டன. மேலும் 4 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
டங்ஸ்டன் போராட்டம் : வழக்குகள் வாபஸ்!
சென்னை, ஜன. 11 - மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேதாந்தா குழுமம் டங்ஸ்டன் சுங்கம் அமைப்பதற்கு அனுமதியளித்து ஒன்றிய அரசு ஏலம் விட்டுள் ளதை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளிக்கிழமை (ஜன.10) சட்டப்பேரவையில் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார். இந்நிலையில், சனிக்கிழமை (ஜன.11) சட்டப்பேரவையில் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த மக்களை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் உறுதிப்பாட்டை எடுத்துக் கூறியதாகவும், மேலும், அந்த போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு
சென்னை, ஜன.11- சட்டப்பேரவையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து திமுக உறுப்பினர் மரு. எழில ரசன் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது, புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறு வதற்கு இது அடிப்படை நோக்கமாகும். இருந்தாலும் இந்த திட்டத்திற்கு உரிய செயலாக் கத்தை, வழிகாட்டுதல்களை, விரிவான செயல்முறைகளை இன்னும் ஒன்றிய அரசு வெளி யிடவில்லை. விரைவில் இந்த வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது வெளியானவுடன் நம் மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவினை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதல்படி இந்த ஓய்வூதிய திட்டத்தை யல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
பொங்கலன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,ஜன.11- தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஜனவரி 15 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 14 பொங்கல் பண்டிகை யன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
பழனி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம்
சென்னை,ஜன.11- பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலு க்கு அறங்காவலர் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. தனசேகர் (சேலம்), கே.எம்.சுப்பிரமணி (திருப் பூர்), அன்னபூரணி, ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், (ஒட் டன்சத்திரம்), சு.பாலசுப்பிர மணியம் (திண்டுக்கல்) ஆகியோரை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நிய மித்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை: 1.87 லட்சம் பேர் ஊர்களுக்கு பயணம்
சென்னை,ஜன.11- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு இயக்கப் பட்ட சிறப்பு பேருந்துகளில் 1,87,330 பேர் தங்களது சொ ந்த ஊர்களுக்கு பயணித் துள்ளனர் என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் வெள்ளியன்று கூடுதலாக 1,314 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,406 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டது. மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2,64,871 பயணிகள் முன் பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 94450 14436 ஆகிய அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூ லிப்பது தொடர்பாக 1800 425 6151 என்ற இலவச எண் மற் றும் 044-24749002, 044-26280 445, 044-26281611 ஆகிய எண் களிலும் புகார் அளிக்கலாம்.