கொழும்பு, ஜன.11- இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய இலங்கை புத்த துறவியான கலகொடாத்தே ஞானசாரவுக்கு ஒன்பது மாதங் கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 1500 இலங்கை ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஞானசார, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்த பய ராஜபக்ஷவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர்.கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர் பான வழக்கில் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையில் பௌத்த துற விகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் நிகழ்வு மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஆனால் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் கருத்து களைப் பேசி வந்த ஞானசார வுக்கு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2018ஆம் ஆண்டு நீதி மன்ற அவமதிப்பு மற்றும் அரசி யல்ரீதியாக கார்ட்டூன் வரையும் கலைஞர் ஒருவரின் மனை வியை மிரட்டிய விவகாரத்தில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் 2019ஆம் ஆண்டு அந்த சிறைத் தண்டனைக்கு எதிராக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது. வியாழக்கிழமை, ஜனவரி 9ஆம் தேதியன்று, தீர்ப்பளித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சாசனத்தின்படி எந்த மதத்தி னராக இருந்தாலும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பின்பற்ற உரிமை உள்ளது என்றும் குறிப் பிட்டுள்ளது. மேலும் அவருக்கு 1500 இலங்கை ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண் டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் அறிவித் துள்ளது.இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார மேல்முறை யீடு செய்துள்ளார்.