- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் தோழர். ஏ.நல்லசிவனின் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மலரில் இடம் பெற்றுள்ள தகவல்களைக் கடந்த மூன்றாண்டுகளாகக் கே.ஜி.பாஸ்கரன், சங்கரநாராயணன், ஆர்.எஸ்.செண்பகம், நாறும்பூநாதன், பி.என்.இசக்கிமுத்து, வண்ணமுத்து, ராஜ்குமார், சேதுராமகிருஷ்ணன் சேகரித்துள்ளனர். மேலும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏ.நல்லசிவன்குறித்த பல்வேறு தகவல்களை அளித்து மலரை மெருகூட்டியுள்ளனர்.
- நிகழ்வில் தோழர் ஏ.நல்லசிவனின் மூத்த மகள் ஆதிமூல மீனாட்சி, இளைய மகள் கற்பகவல்லி, ஏ.நல்லசிவனின் இரண்டாவது சகோதரர் குமரப்பெருமாள் இவர்தலைமறைவு காலத்தில் காவல்துறையின் தாக்குதலுக்குள்ளானவர். மூன்றாவது சகோதரர் ஆறுமுகத்தின் மகன் கணேசன், மருமகன் சிதம்பரம், பேரன் குமரப்பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.
- தோழர் நல்லசிவன் நூற்றாண்டு நிறைவு நிகழ்விற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்பாசமுத்திரம் நகர், மன்னர்கோவில், வாகைக்குளம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் ரூ. 1லட்சம் வரை மக்கள் நிதியளித்துப் பெருமை சேர்த்தனர்.