states

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும்!

சென்னை, ஜன. 6 - தேர்தலின் போது அளித்த வாக்கு றுதிகளை முழுமையாக நிறைவேற்ற தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிகழ்த்தப் பட்ட ஆளுநர் உரையின் பல்வேறு அம்சங் கள், அறிவிப்புக்களைக் குறிப்பிட்டு, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: பெரும் எதிர்பார்ப்பு உள்ளது தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களும், அதன் செயல் பாடுகளும் ஒருங்கிணைத்து ஆளு நர் உரையில் குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தா லும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டு மென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. மின்கட்டண உயர்வால் பாதிப்பு குறிப்பாக, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சிறு-குறு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வரு கின்றனர்.  தீர்க்கப்படாத குடிமனை பிரச்சனை நீதிமன்றத் தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடி யிருப்புகளை அப்புறப்படுத்தும் நட வடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். கோவில் நிலங் களில் குடியிருக்கும் மக்களுக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.  தவிப்பில் அரசுத் துறை ஊழியர்கள்  அதுபோல அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், ஒப்பந்த  ஊழியர்கள் தங்களது கோரிக்கை களை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். கூடுதல் முக்கியத்துவம் அவசியம் இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு கள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.