ஜார்க்கண்ட் மாநில மக்களின் ஜனநாயக உணர்வால் மாநிலத்தில் வகுப்புவாத பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இனி ஜார்க்கண்டில் வகுப்புவாத பாசிச சக்திகளுக்கு வேலை இல்லை. ஜார்க்கண்டைப் போலவே தில்லி சட்டமன்ற தேர்தலிலும் பாஜக பலத்த அடியை சந்திக்கும்.
45 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங்கின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. ஒன்றிய அரசின் பிடிவாதம் தான் ஏற்கனவே போராடிய 750 விவசாயிகளின் உயிரைப் பறித்தது. விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கொடுமை ஏன் நடக்கிறது? பிரதமர் மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்து, உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.
பீகார் மாநில தேர்வாணைய வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக தேர்வர்கள் அநீதிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் பாஜக கூட்டணி அரசு வாய்மூடி பார்வையாளராக நிற்கிறது. இது கண்டனத்துக்குரியது.
சுதந்திரத்துக்குப் பிறகு ஏழைகளின் வீடுகளை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கிய ஒரே கட்சி பாஜகதான். 2022-2023 வரை தில்லியில் 35 முறை ஏழைகளின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துள்ளது பாஜக. இதற்கு தில்லி மக்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.
தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சனாதன் சேவா சமிதி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டிய லில் பாஜகவிலிருந்து கட்சி மாறி வந்தவர்களுக் கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதி எம்எல்ஏ பி.வி. அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள இன்போ சிஸ் வளாகத்தில் சிறுத்தை ஒன்று தென் பட்டதாக செய்தி வெளியானது. இதனைத் தொ டர்ந்து அந்நிறுவனம் வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு உத்தரவிட்டுள்ளது.