ரஜினிகாந்துக்கு முதல்வர் வாழ்த்து
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வயதை வென்ற வசீகரம் கொண்டவர், மேடையில் ஏறி னால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை கொண்டவர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம் கொண்டவர்” என முதல மைச்சர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெற்றி படைப்புகளை அளித்து மக்களின் அன்போடும் ஆதர வோடும் ரஜினியின் வெற்றிக் கொடி பறக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். கமலஹாசன், எடப்பாடி பழனிசாமி, வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் முடித்து வைப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் இந்த ஆண்டின் (2025) முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தொடங்கியது. அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டு, அதன் மீதான விவாதமும் நடந்தது. தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து முடிந்தது. அதன்பிறகு, கடந்த அக். 14 ஆம் தேதி மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத் தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஜன.6 ஆம் தேதி தொடங்கிய சட்ட சபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்படுகிறது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியாகவுள்ள நிலையில், அதில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 14-ஆம் தேதியுடன் திருத்தப் பணிகள் முடிவ டையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விநியோகிக்கப்பட்ட படிவங்களில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், வரைவு வாக்காளர் பட்டியலில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இடமாற்றம் ஆனவர்கள் 40 லட்சம் வரை உள்ளதாகவும், 30 லட்சம் வரை இறந்த வர்கள் பெயர் உள்ளதாகவும் தெரிகிறது. இரட்டைப் பதிவு 4 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுதில்லி: கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு உள்ள தாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புல னாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கை வெள்ளியன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்ற மதுரை அமர்வில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் எப்படி வழக்கை விசார ணைக்கு எடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பின் விவாதிக் கலாம் என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது. தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு வாதிட்டது.
ஒரு நபர் ஆணையம் அமைப்பு
சென்னை: தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் கலைமகள் சபா நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலம் மூன்று மாநிலங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட இந்த நிறுவனத் துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையம், சொத்துக்களை மின்னணு முறையில் பொது ஏலம் விட்டு உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்கும்.