சென்னை, நவ. 25 - தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9 அன்று கூடவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு திங்களன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு சட்டப் பேரவை விதியின்படி, தமிழக சட்டப் பேரவைக் கூட்டமானது, வரும் டிசம்பர் 9-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடை பெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார். மேலும், “அலுவலர் ஆய்வுக் குழுவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் உள்ள னர். அவர்கள்தான், கூட்டத்தொடர் எத்த னை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வர்” என்று கூறிய பேரவைத் தலைவர் அப்பாவு, “சட்டமன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நேரலை செய்யப்படுகிறது. கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. மு.க. ஸ்டாலின் முதல்வ ரான பிறகுதான், நேரலை ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப் பிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதன்மை செயலாளர் கி. சீனிவாசன் வெளி யிட்டிருக்கும் செய்திக் குறிப்பிலும், “சட்ட மன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை டிசம்பர் 9 அன்று காலை 9.30 மணிக்கு தலை மைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலை வர் கூட்டியுள்ளார்” என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.