states

img

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய  5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு  பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கப்படு கிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்நிலையில், 16ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவின் காசான் நகரில் அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில்   நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு  ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி அக்டோபர் 23ஆம் தேதி ரஷ்யா செல்கிறார்.